Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்காக 5 வகை பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்தது ’ஸ்ரீபாலம் சில்க்ஸ்’

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (19:05 IST)
தீபாவளி திருநாளையொட்டி ஸ்ரீபாலம் சில்க்ஸ் 5 வண்ணமிகு டிசைன்களில் பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது.


 
மாறிவரும் கலாச்சாரத்திலும் இளம்பெண்களின் விருப்பத் தேர்வாக இருப்பவை பட்டுப் புடவைகள். கார்ப்பரேட் யுக பெண்களும் விரும்பி அணியும் வண்ணம் புத்தம் புது டிசைன்களை ஆண்டுதோறும் அறிமுகம் செய்து நவீனரக பட்டுப் புடவைகள் கடைகளில் தனித்து நிற்பது ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனம் ஆகும்.

 
ஒளிவிழாவான தீபாவளி திருநாளையொட்டி ஸ்ரீபாலம் சில்க்ஸ் 5 வண்ணமிகு டிசைன்களில் பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது. சென்னையின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற கண்ணைக் கவரும் இந்த பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
 
ஸ்ரீபாலம் சில்ஸ் நிறுவனர் திருமதி.ஜெயஸ்ரீரவி. பாலம் ஹ்யூஸ், சில்வர்லைன், ப்ளெண்ட் இன் ட்ரெண்ட், எக்ஸ்-பிரஸ்ஸன் மற்றும் ஷோ ஸ்டாப்பர் என மொத்தம் ஐந்து விதமான பட்டுப் புடவைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
 
நவீன பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்து வைத்து பேசிய ஸ்ரீபாலம் சில்ஸ் நிறுவனர் திருமதி.ஜெயஸ்ரீ ரவி அவர்கள், தீபாவளி திருவிழாவுக்காக ஐந்து விதமான புடவைகளை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.
 
இன்றைய இளம் தலைமுறை பெண்களை கவரும் விதமாகவும், தொடர் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாகவும் புத்தம்புது டிசைன்கள், விதவிதமான துணிகள், பலவிதமான வண்ணங்கள் போன்றவற்றின் சங்கமமாக ஐந்து பட்டுப் புடவைகளை இந்த விழாக்காலத்திற்காக உருவாக்கி உள்ளதாக கூறினார்.
 
தீபாவளி பண்டிகைக்காக ஸ்ரீபாலம் சில்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த ஐந்து வகையான பட்டுப் புடவைகள் அண்ணாநகர், லஸ் சர்ச்,பாண்டி பஜார் மற்றும் பெங்களுர் ஜெயநகரில் உள்ள ஸ்ரீபாலம் சில்க்ஸ் அவுட்லெட்டுகளில் கிடைக்கும்.
 
மேலும், www.palamsilks.com என்ற இணையம் மூலமாகவும் உலகெங்கும் வாழும் பட்டுப் புடவை ரசிகர்களுக்காக விற்பனையும் உண்டு.

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

Show comments