திடீரென 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (10:02 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக புத்தாண்டுக்கு பின்னர் இரண்டு நாட்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்கு சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 910 என வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் சென்சாக்ஸ் 61 ஆயிரத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்து 18120 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் பங்குச் சந்தை சரிந்தாலும் மதியத்திற்கு மேல் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments