Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 நாளாக உயராத பெட்ரோல் & டீசல் விலை!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
கடந்த 17 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

 
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியும் வந்து கொண்டிருந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது என்பதும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளானார்கள் என்பதையும் பார்த்து வந்தோம்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தும் ஒரே விலையிலும் இருப்பதை அடுத்து, சென்னையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது.
 
கடந்த 15 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் 17வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நூத்தி ரூ.102.49 என்ற விலையில் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.39 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments