இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

Siva
சனி, 31 ஜனவரி 2026 (16:37 IST)
வெள்ளி சந்தை வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில், இன்று வெள்ளி விலை ஒரே நாளில் மிகக்கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, வெள்ளி கிலோவிற்கு ரூ. 55,000 குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மாலையில் மேலும் ரூ. 30,000 சரிவை கண்டுள்ளது.
 
ஒரே நாளில் மொத்தமாக கிலோவிற்கு ரூ. 85,000 வரை குறைந்துள்ளதால், ஒரு கிலோ வெள்ளியின் விலை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், டாலர் மதிப்பின் ஏற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் திடீர் லாப நோக்க விற்பனை போன்றவையே இந்த அதிரடி சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
 
இந்த வரலாறு காணாத விலை வீழ்ச்சி நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் மளமளவென குறைந்தது முதலீட்டாளர்களுக்குப் பெரும் கவலையை தந்தாலும், சுப நிகழ்ச்சிகளுக்காக வெள்ளி வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

230 எண்ணெய் கப்பல்கள் வெயிட்டிங்!.. ஹோர்மூஸ் நீரிணையை திறக்குமா ஈரான்?....

புதுச்சேரி, கேரளா, அசாமில் சட்டமன்ற தேர்தல் நிறைவு!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?..,

10 பெட்டாபைட் அளவிலான ராணுவ ரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்.. அனைத்தும் கிரிப்டோகரன்சிக்கு விற்பனை..!

10 ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கு.. மகாபாரத போர் என நீதிபதிகள் விமர்சனம்.. ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..!

புதுச்சேரியில் 86.92% வாக்குப்பதிவு.. இளைஞர்கள் எல்லோரும் விசிலுக்கு குத்திட்டாங்களோ?

அடுத்த கட்டுரையில்
Show comments