H1B விசா விவகாரத்தால் இன்னும் பாதிப்பு.. இன்றும் பங்குச்சந்தை சரிவு..!

Siva
புதன், 24 செப்டம்பர் 2025 (10:09 IST)
கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை, அமெரிக்காவின் H1B விசா கட்டுப்பாடுகள் குறித்த கவலைகளால் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த தொடர் சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 225 புள்ளிகள் சரிந்து 81,870 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் குறைந்து 25,645 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அப்போலோ ஹாஸ்பிடல், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் லீவர், மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்ந்தன.
 
ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments