Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று ஏற்றம் தான்.. ஆனால் மதியத்திற்கு பின் ஏமாற்றுமா?

Siva
வியாழன், 13 மார்ச் 2025 (10:01 IST)
இந்தியா பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே சரிந்து கொண்டே வரும் நிலையில், சில நாட்கள் மட்டும் உயரும். அந்த சில நாட்களிலும் காலையில் உயர்ந்தாலும், மதியத்திற்கு மேல் திடீரென மீண்டும் சரிவைச் சந்திக்கும்.
 
அந்த வகையில், இன்று  பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம் செய்தாலும், மாலைக்கு பின் திடீரென சரியுமே என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்று முன் 250 புள்ளிகள் உயர்ந்து 74,284 ஆகி வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல், தேசிய பங்குசந்தை நிப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 22,539 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல் டெக்னாலஜி, டெக் மகேந்திரா, டைட்டன், எச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, டிசிஎஸ், ஆசியன் பெயிண்ட், டாடா மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ் பாஸ் வைத்து இனி ஏசி பஸ்ஸிலும் போகலாம்! சென்னையில் அதிரடி மாற்றம்!

எக்கச்சக்க சர்ப்ரைஸ் இருக்கோ? நாளை தமிழக பட்ஜெட்! சென்னையில் 100 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!

முடிந்தது மழை..? வெளுக்கப்போகும் வெயில்? இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்! - வானிலை ஆய்வு மையம்!

தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; 100 கிமீ இலக்கை தாக்கும் சோதனை வெற்றி..!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மீண்டும் சிக்கல்! ராக்கெட் பழுது..!

அடுத்த கட்டுரையில்
Show comments