Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

Siva
திங்கள், 9 ஜூன் 2025 (09:50 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தை உயர்வை பதிவு செய்துள்ளதனால், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 315 புள்ளிகள் உயர்ந்து, 82,554 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் இது 83,000 புள்ளிகளை எட்ட வாய்ப்பு இருப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 95 புள்ளிகள் உயர்ந்து, 25,123 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி,  ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments