7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (11:01 IST)
இந்திய பங்குச் சந்தையை கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில், நேற்றும் இன்றும் உயர்ந்து, தொடர்ந்து 7 நாட்கள் உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே உயர்ந்து வருகிறது. சற்று முன், மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 146 புள்ளிகள் உயர்ந்து 78,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 27 புள்ளிகள் உயர்ந்து 23,688 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் டெக் மகேந்திரா, டி.சி.எஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், பாரதி ஏர்டெல், ஐடிசி, மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் குறைந்து கொண்டிருக்கின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments