தங்கத்தின் விலை இன்னும் அதிரிக்கும்... இறக்குமதி வரி உயர்வு!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (12:32 IST)
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 

 
தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலகத்திலேயே 2வது பெரிய நாடு இந்தியா. இதனிடையே தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தங்கம் இறக்குமதியை குறைக்கவும் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,785-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிவி சவுண்டை குறைக்க சொன்ன கணவர்!.. கத்தியால் குத்தி கொலை செய்த அன்பு மனைவி!...

திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்!.. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்....

ஓபிஎஸ் ஆதரவோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்!.. சட்டசபையில் சிரிப்பலை!...

அந்த பயம் இருக்குவரை ஆட்சி செய்வது ஸ்டாலின்தான்!.. தங்கம் தென்னரசு ராக்ஸ்!...

நெருங்கும் தேர்தல்!.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..

அடுத்த கட்டுரையில்
Show comments