Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிவை நோக்கி பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (09:43 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தை உள்பட ஆசிய பங்குச்சந்தை நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்பதும், இதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று திடீரென மீண்டும் பங்குச்சந்தை சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 374 புள்ளிகள் குறைந்து 80,010 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 119 புள்ளிகள் குறைந்து 24,364  என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, சவுத் இந்தியன் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, எஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, பிரிட்டானியா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments