Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த வாரம் முதலே உயரும் தங்கம் விலை - முழு விவரம்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (11:04 IST)
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.14 உயர்ந்து 4,831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.14 உயர்ந்து 4,831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5,230 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து  ரூ.66.10 எனவும், ஒரு கிலோ விலை ரூ.66,100 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
கடந்த 19 ஆம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,755-க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040-க்கும் விற்கப்பட்டது. 20 ஆம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. 21 ஆம் தேதியும் சவரன் ரூ.192 உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments