மீண்டும் ரூ.37,000-த்தை கடந்த தங்கம் விலை!

Webdunia
திங்கள், 31 மே 2021 (10:46 IST)
ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளது.     

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனிடையே இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 
 
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடனே தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,628 விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 136 உயர்ந்து ரூ.37,024-க்கு விற்பனையாகிறது.
 
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.60 விலை உயர்ந்து ரூ.76.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?

ஆண்களுக்கும் இலவச பேருந்து.. மகளிருக்கு மாதம் ரூ.2000.. எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன்.. 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி?

டிரம்ப் வரிவிதிப்பால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குஜராத் மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

க்ரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி: டிரம்ப் அச்சுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments