ஒரு சவரன் ரூ.60,000: எஸ்டிமேட் போடும் வியாபாரிகள்!!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:38 IST)
2022-ல் ஒரு சவரன் 60,000 ரூபாயை தாண்டும் என தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். 
 
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.    
 
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து இன்று சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 39,352‬ ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 29 ரூபாய் குறைந்து 4919 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 
 
கடந்த 19 நாட்களில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.4,008 வரை குறைந்துள்ளது. அதேபோல வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடயே விலை ஏற்ற, இறக்கங்கள் தற்காலிகமானதே எனக் கூறும் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், 2022-ல் ஒரு சவரன் 60,000 ரூபாயை தாண்டும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலை நோக்கி அதிமுக - தவெக கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் 'சுப ஆரம்பம்' Vs விஜய்யின் மறுப்பு!

பீகார் தேர்தல்: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு - பா.ஜ.க., JDU தலா 101 இடங்கள்!

மிகக்குறைந்த வித்தியாசம்தான்.. பீகாரில் ஆட்சி அமைப்பது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

கரூர் துயர சம்பவ விவகாரம்: இன்னொரு தவெக மாவட்ட செயலாளர் கைது.. நீதிபதியை விமர்சித்தாரா?

இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்க ஊடுருவல் தான் காரணம்: அமித்ஷா சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments