Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் 2200 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை..!

Siva
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (09:51 IST)
இன்று ஒரே நாளில், ஒரு சவரனுக்கு  2000 ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விலை ஏறி உள்ளதுடன், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரலாறு காணாத உச்சம் என நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர், இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது 74 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 275 ரூபாயும், ஒரு சவரனுக்கு 2200 ரூபாயும் உயர்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில்  தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலையே இன்றும் வெள்ளி விற்பனையாகி வருகிறது. .
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,015
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,290
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,834
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,672
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,072
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments