Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து சரியும் தங்கம் விலை

தொடர்ந்து சரியும் தங்கம் விலை
, புதன், 22 ஜூலை 2015 (03:18 IST)
தங்கத்தின் விலை நாளுக்குநாள் வீழ்ச்சி கண்டு வருகிறது. 
 

 
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.17 குறைந்து ரூ.2,385க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.136 குறைந்து ரூ.19,080க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.18 குறைந்து ரூ.2,551க்கு விற்பனையானது.
 
ஒரு கிராம் வெள்ளி விலையும் 10 காசுகள் குறைந்து ரூ.36.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
ஒரே நேரத்தில் தங்கமும், வெள்ளியும் விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது, ஆடி மாதம் என்பதால், இந்த மாதம், திருமணம், காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகளை யாரும் செய்வதில்லை. இதனால், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil