Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? டிரம்ப்பின் 500% வரி உயர்வு அச்சுறுத்தலால் பாதிப்பா?

Siva
வெள்ளி, 4 ஜூலை 2025 (10:51 IST)
ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்பின் இந்த அச்சுறுத்தலையும் மீறி, இந்திய பங்குச்சந்தை நிலையான இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று வெறும் 5 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 83,242 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 8 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 25,414 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், இன்டஸ்இண்ட் வங்கி, மாருதி, சன் பார்மா, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? டிரம்ப்பின் 500% வரி உயர்வு அச்சுறுத்தலால் பாதிப்பா?

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

கோவையில் பதுங்கிய நிகிதா? போன் செய்தும் வராத போலீஸ்? - என்ன நடந்தது?

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments