Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

Mahendran
சனி, 19 ஜூலை 2025 (10:51 IST)
சென்னையில் இன்றைய நிலவரப்படி,  ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் ₹480 உயர்ந்து, ₹73,360-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு கிராம் தங்கம் ₹60 அதிகரித்து, ₹9,170-ஐ எட்டியுள்ளது.
 
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலா ₹40 உயர்வை கண்டிருந்த தங்கம், தற்போது மூன்றாவது நாளாக அதிரடியான ஏற்றத்தை சந்தித்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஏறியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹1 உயர்ந்து ₹126-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,26,000-க்கு விற்கப்படுகிறது.
 
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. நகை சந்தையின் எதிர்கால போக்கு குறித்து அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments