Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்வு!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (14:46 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.205-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 315 அதிகரித்தது.

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது. பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம், அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் டாலரின் மதிப்பு குறைவது ஆகிய காரணங்களினால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. தங்கத்தில் முதலீடு செய்த நிறுவனங்களும் தங்கத்தை விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டின. என்று டோக்கியோ சந்தையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை இது வரை வரலாறு காணாத அளவு அதிகரித்தது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 891 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் தங்கம் 881 டாலர்.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 890.60/891.40 டாலராக இருந்தது (நேற்றைய விலை 878.10/878.90). வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.82/15.87 டாலர் (நேற்றைய விலை 15.70/15.75).

இன்றைய காலை விலை நிலவரம்;

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,340
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 11,285
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,230.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments