Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2009 (10:30 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. ஆனால் ஒரே நிலையாக இல்லாமல் அடிக்கடி மாற்றத்துடன் உள்ளது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் பங்குகளை வாங்கிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று அதிக அளவு விற்பனை செய்தன. இவை இன்று வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்பு உண்டு.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.

கடந்த வாரத்தில் பங்குகளை தொடர்ந்து வாங்கிய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இன்று விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உண்டு. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கிய பிறகு, நண்பகலில் நிலைமை மாற வாய்ப்பு உண்டு.

இன்று காலை ஆசிய நாட்டு சந்தைகளில் சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை தவிர மற்ற பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது.

ஜப்பானின் நிக்கி 25.01, ஹாங்காங்கின் ஹாங்செங் 78.77, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 26.07, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 17.50 புள்ளிகள் அதிகரித்தன.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 10.28 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 254.16, எஸ் அண்ட் பி 500-28.41, நாஸ்டாக் 43.40 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை பாதகமாக இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-135.94 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.20 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 32.63 ( NSE-nift y) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 3040.10 ஆக உயர்ந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 87.18 ( BSE-sense x) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,655.32 ஆக உயர்ந்தது.

இதே போல் மிட் கேப் 17.46, சுமால் கேப் 19.41, பி.எஸ ். இ 500-28.32 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.16 மணியளவில் 751 பங்குகளின் விலை அதிகரித்தும், 428 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 41 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.452.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நிகரமா க ரூ.49.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments