Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (11:24 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து இருந்தது. காலை வர்த்தகம் நடக்கும் போது எல்லா பிரிவு பங்குகளும் ஏற்ற இறக்கமாக இருக்கின்றன.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 7.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,453.95 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4039.20 ஆக இருந்தது.

இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன.

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய நிலவரம் போலவே, எல்லா பங்குகளின் விலைகளும் அதிக மாற்றத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.45 மணி நிலவரப்படி 487 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1398 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 45 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 10.89 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,450.71 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.10 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4026.45 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 108.01, சுமால் கேப் 124.08, பி.எஸ ்.இ. 500- 150.00 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,930.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,139.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.208.66 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,312.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.587.97 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.724.18 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூன் மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 12,667.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.59,162.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வெள்ளிக் கிழமை ஸ்பெயின், பிரிட்டன் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-11.70 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 3.50 புள்ளி அதிகரித்தது. நாஸ்டாக் 22.65 புள்ளி குறைந்தது.

இன்று காலை 10.30 மணியளவில், ஆசிய நாடுகளில் ஹாங்காங், ஜப்பான் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 4.03, சீனாவின் சாங்காய் காம்போசிட் 49.81, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 1.29 புள்ளி குறைந்தது.

ஹாங்காங்கின் ஹாங்சாங் 59.66, ஜப்பானின் நிக்கி 54.49, புள்ளி அதிகரித்தது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments