Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (11:13 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 324 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,340.45 ஆகவும், நிஃப்டி 108 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3985.20 ஆக குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்திருந் த குறியீட்டு எண்கள் சிறிது நேரத்தில் அதிகரித்தன.

ஆனால் எல்லா பங்குச் சந்தைகளிலும் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன.

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று அதிகரித்த குறீயீட்டு எண்கள், இன்று சரிந்தன. குறிப்பாக ரியல் எஸ்டேட், வங்கி, உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், நுகர்வோர் பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.35 மணி நிலவரப்படி 367 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1414 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 30 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 521.51 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,143.11 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 161.70 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3931.65 ஆக இருந்தத ு.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 149.37, சுமால் கேப் 145.52 பி.எஸ ்.இ. 500- 201.52 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,666.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,334.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.668.43 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.029.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.608.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.421.01 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 459.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.59,621.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று இத்தாலி, ஸ்பெயின் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-53.60 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 166.75 நாஸ்டாக் 53.51 புள்ளி குறைந்தது. எஸ்.அண்ட்.பி-500 மாற்றம் இல்லை.

இன்று காலை 10.45 மணியளவில், ஆசிய நாடுகளில் சீனா, ஹாங்காங், ஜப்பான் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. மற்றவைகளில் குறைந்து இருந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 9.87, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 18.23 புள்ளி குறைந்தது.

ஹாங்காங்கின் ஹாங்சாங் 36.78, ஜப்பானின் நிக்கி 25.51 சீனாவின் சாங்காய் காம்போசிட் 39.36 புள்ளி அதிகரித்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments