பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 102.59 புள்ளிகள் சரிந்து 19223 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 36.45 புள்ளிகள் சரிந்து 5814 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், இன்போசிஸ் மற்றும் ஹீரோ மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், என்.டி.பி.சி, பார்த்தி ஏர்டெல், கெய்ல், ஹெச்டிஎப்சி பேங்க் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.