Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை 'சரேல்' உயர்வு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2011 (17:03 IST)
இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 47 அதிகரித்தது. இதனால் நேற்று ரூ. 2,203க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் ரூ. 2,250 ஆக உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 376 அதிகரித்து 18 ஆயிரம் ரூபாயை எட்டியது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ. 152 குறைந்து ரூ. 17 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது.

நேற்று தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ. 2,203 விற்றது. ஒரு பவுன் தங்கம் ரூ. 17 ஆயிரத்து 624 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று ஆடிப்பெருக்கு என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments