Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் ரூ.675, வெள்ளி ரூ.1,600 உயர்வு

தங்கம் ரூ.675, வெள்ளி ரூ.1,600 உயர்வு
, வெள்ளி, 9 செப்டம்பர் 2011 (17:54 IST)
இரண்டு நாட்களுக்கு முன்னர் 10 கிராமுக்கு ரூ.930 குறைந்த தங்கத்தின் விலை, பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இன்று ரூ.675 உயர்ந்துள்ளது.

புதுடெல்லி தங்கச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.28,590 ஆக உயர்ந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.65,700 ஆக உயர்ந்துள்ளது.

லண்டன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13.25 டாலர்கள் அதிகரித்து 1,883.43 டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.28,440 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் எடை கொண்ட சவரனின் விலை ரூ.100 அதிகரித்து ரூ.22,700 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil