Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான முந்திரி முறுக்கு எப்படி செய்வது...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு  - 1 கப்
முந்திரி - 20
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
 
முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும். வேண்டுமானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ளலாம். 
 
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கில் எண்ணெய்யை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெய்யில் பிழியலாம் அல்லது ஒரு கரண்டியின் மீது பிழிந்தும் போடலாம்.

பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments