Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொறு மொறு உளுந்து வடை‌க்கு...

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2011 (14:50 IST)
மொறு மொறு உளுந்து வட ை‌க்கு...

உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டு வடை செய்தால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

பூசணிக்காய் தோல் வடகம் (வறுவல்)

மோரில் சொஞ்சம் உப்புடன், பச்சை மிளகாயையும் அரைத்து, கலக்கிக் கொள்ள வேண்டும். அதில் பூசணிக்காய் தோலை நன்றாகக் கழுவிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிப் போட்டு, மறுநாள் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவையான பொழுது வடகம்போல் எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.

பூர ி, சப்பாத்தி சுவையாக இருக்க...

கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கிலோ கோதுமைக்கு ஒரு கைப்பிடி அளவு கொண்டைக் கடலையும் சேர்த்து அரைத்து பூரி, சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்.

சோமாஸ் நல்ல இனிப்புடன் இருக்க...

இனிப்பு சோமாஸ் செய்தால் மேல் ஓடு இனிப்பில்லாமல் சப்பென்றிருக்கும். இதைப்போக்க சர்க்கரையில் பாகு வைத்து அதில் சோமாஸிகளை போட்டு எடுத்து, தாம்பாளத்தில் ஆறவிடவும். சோமாஸிகள் நல்ல இனிப்புடன் சுவையுடன் இருக்கும்.

உருளைக்கிழங்கை வேக வைக்க...

உருளைக்கிழங்கை தண்ணீரில் கொதிக்க வைத்து சமைப்பதைவிட இட்லி தட்டு போன்றவற்றில் வைத்து வேக வைப்பதே நல்லது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments