Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மளிகை சாமான்கள் தீர்ந்து விட்டால்

மளிகை சாமான்கள் தீர்ந்து விட்டால்
, வெள்ளி, 12 நவம்பர் 2010 (17:02 IST)
அடுப்பங்கரை அலமாரியில் ஒரு பேப்பர் பேடும் பேனா ஒன்றும் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினமும் தீர்ந்து விட்ட சாமான்களை குறித்து வையுங்கள். கடைக்குச் செல்லும்போது இந்த சீட்டை எடுத்துச் சென்று வேண்டிய சாமான்களை மறந்து விடாமல் வாங்கி வரலாம். இதனால், கடைகளுக்கு அடிக்கடி ஓடும் விதத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

காய்கள், பழங்கள் வாங்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருப்பதையே வாங்க வேண்டும். அவற்றில்தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

ரசம் தயாரிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்துக் கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும். முருங்கைக்கீரை சேர்ப்பதால் நல்ல சத்தாகவும் இருக்கம்.

முட்டை கோஸ் சமையல் செல்யும்போது, அதில் சிறிதளவு பால் ஊற்றுங்கள். அதிக சுவையாக இருக்கும். சத்தும் கூடும்.

பிரியாணி தயார் செய்யும்போது நல்ல நிறமும் உதிரி, உதிரியாக இருக்கவும் வேண்டுமானால் அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil