Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

Webdunia
சனி, 23 நவம்பர் 2013 (17:22 IST)
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1
கேரட், வெள்ளரிக்காய் - விரும்பினால்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
FILE
நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.

வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார்.

இதி‌ல் நிறைய வகைகள் உள்ளன. கருவாட்டை சுட்டு, முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல். கத்திரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல்.

கத்திரிக்காயும், தக்காளியும் நீக்கிவிட்டு புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்… வெங்காய சம்பல் தயார்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments