Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையல் குறிப்புகள்

Kitchen Tips

சமையல் குறிப்புகள்
, வெள்ளி, 26 அக்டோபர் 2012 (16:08 IST)
ரொட்டி ரோஸ்ட் செய்யும்போது...

ரொட்டிகள் மற்றும் நான்களை முதல் ஒரு முறை பாதி ரோஸ்ட் செய்த பின், விருந்தாளிகளுக்கு அவற்றை பரிமாறும்போது திரும்பவும் நன்றாக சூடாக்கிக் கொள்ளலாம். இதனால் சூடாகவும் ருசியாகவும் சாப்பிடலாம்.

பருப்பு வேக வைக்கும்போது...

பருப்பை வேக வைக்கும்போது சில வெந்தயம் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் நன்றாக வெந்து ருசியாகவும் காணப்படும். உடலுக்கும் சிறந்தது.

கீரையை சமைப்பதற்கு முன்...

பச்சை காய்கறிகள் குறிப்பாக கீரை வகைகளை சமைப்பதற்கு முன் அவற்றை சுத்தம் செய்து அதில் உள்ள மண்ணை நீக்க வேண்டும். இதற்கு, கீரை இலையை எடுத்துவிட்டு அதை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்குள் ஐந்து நிமிடங்கள் வரை ஊர வைக்கவும். இவ்வாறு வைப்பதன் மூலம் கீரையில் உள்ள மண்ணை அடியில் படியச்செய்யும்.

சப்பாத்தி மென்மையாக இருக்க...

சப்பாத்தி செய்யும்போது 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சப்பாத்தி பிசையும்போது சேர்த்தால், சப்பாத்தி மிகவும் மென்மையாகவும் மெல்லியதாகவும் காணப்படும்.

மைதா மாவு கடினமாகாமல் இருக்க...

மைதா மாவை தண்ணியுடன் கலக்கிய பின்னர் அது கடினமாகாமல் இருக்க, நீங்கள் சமைக்கும்போது உங்கள் அடுப்பின் அருகே வைக்கவும். நெய் வகைகளுக்கும் இந்த முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.

சூப் மணமாக இருக்க...

எந்த சூப் செய்யும்போதும் அதற்கு தென்னிந்திய நாட்டு மணம் வர வேண்டுமானால், சிறிதளவு மிளகாய்ப்பொடி அல்லது ஆந்திராப்பொடியை சமைக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.

குழம்பு ருசி அதிகரிக்க...

சைவ மற்றும் அசைவ குழம்பு வகைகளை செய்யும்போது அதன் ருசியை அதிகரிக்க வேண்டுமானால், சிறிதளவு பார்லி பவுடரை சேர்க்கலாம்.

உருளைக்கிழங்கு ஆவியில் வைப்பதற்கு முன்பு சிறிது வினிகரை அந்தத் தண்ணீரில் சேர்த்தால், கிழங்கு சீக்கிரமாக நன்றாக வெந்துக் காணப்படும்.

வெண்டைக்காயை சமைக்கும்போது பாத்திரத்துடன் ஒட்டிக் கொள்ளாமல் காணப்பட, சிறிதளவு தயிரை சேர்த்துக் கொள்ளவும்.

பாதாம் பருப்பின் தோலை எளிதில் உரிக்க வேண்டுமானால், அவற்றை வெதுவெதுப்பான சூடு காணப்படும் தண்ணீரில் ஒரு நிமிடம் ஊற வைத்த பின் முயற்சிக்கவும்.

எப்போதும் ரெடிமேட் இஞ்சி பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட்டை ஃப்ரிட்ஜூக்குள் வைத்துக் கொள்ளவும். அவசரமாக சமையல் செய்யும்போது நன்றாக உதவும்.

தர்பூசணிப்பழத்தை மெலிதான ஸ்லைஸ்களாக நறுக்கினால் எளிதில் அதன் விதைகளை நீக்கிவிட்டு விரைவாக சாப்பிட்டு அடுத்த பழத்திற்கு தயாராகலாம்.

நறுக்கிய ஆப்பிள்கள் நிறம் மாறாமல் நீண்ட நேரம் காணப்பட வேண்டுமானால், குளிர்ந்த உப்பு தண்ணீரில் அவற்றை நனைத்து துணியில் துடைத்து எடுத்து வைத்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

கட்லட்களுக்கு சேர்க்கும் உருளைக்கிழங்குகளை வேக வைக்கும்போதே உப்பையும் சேர்த்து வேக வைத்தால், உருளைக்கிழங்கிற்குள் உப்பு ஊறி கட்லட் ருசியாகக் காணப்படும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

மொறுமொறுப்பான அதிகம் எண்ணெய் இல்லாத பஜ்ஜிகளை தயாரிக்க வேண்டுமானால், சிறிதளவு அரிசி மாவையும் அதன் கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

ரயித்தா ருசியாக இருக்க...
ஊற வைத்த பீன்ஸ் அல்லது முளைவிட்ட பயிர்களை ரயித்தாவுடன் சேர்ப்பது அதற்கு மேலும் ருசியை அளிக்கும்.

பாசுமதி அரிசியை வேக வைக்கும்போது ஒன்று அல்லது இரண்டு சொட்டு எலுமிச்சைப்பழ சாரையும் 1/2 டீஸ்பூன் நெய்யையும் சேர்த்தால், அரிசி மிக வெள்ளையாகவும் உடையாமல் முழுசாகக் காணப்படும்.

கத்தரிக்காயை நறுக்கிய பின் சிறிது நேரம் கழித்தும் அதன் நிறம் மாறாமலிருக்க, அதன் வெட்டுப்பகுதிகளில் எல்லாம் உப்பு தண்ணீரை தெளிக்கவும்.

வேக வைத்த முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டுமானால், வேக வைத்த முட்டையை அதன் ஓடுடன் அவ்வாறே குளிர்ந்த தண்ணீருள்ள பாத்திரத்திற்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil