Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டை கெடாமல் இருக்க...

Webdunia
சனி, 30 மார்ச் 2013 (17:15 IST)
FILE
அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய எளிமையான, அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ் இதோ...

முட்டை கெடாமல் இருக்க...

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க...

உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

ஸ்வீட் செய்த பின்...

ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.

குலோப்ஜாமூன் செய்யும்போது...

குலோப்ஜாமூன், ஜிலேபி, ஜாங்கிரி முதலியவைகளுக்கு ரொம்ப கம்பி பதம் தேவையில்லை. பிசுக்குப் பதம் இருந்தால் போதும் கைகளில் பிசுக்காக ஒட்ட வேண்டும் கம்பிப்பதம் ஆரம்பிக்கும் முன் எடுத்துவிட வேண்டும்.

மைசூர் பாகு செய்யும்போது...

மைசூர் பாகு, காஜு கட்லி, பாதாம் கேக் முதலியவைகளில் கடலை மாவு அல்லது முந்திரி அல்லது பாதம் போட்டுக் கிளறும் ஸ்வீட்டுகளுக்கு, பாகு, ஒற்றைக் கம்பிப் படியாக இருக்க வேண்டும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments