Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை ரவை பீட்ரூட் அல்வா

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2014 (18:27 IST)
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 150 கிராம்
பீட்ரூட் - 150 கிராம்
ச‌ர்‌க்கரை - 300 கிராம்
ஏல‌க்கா‌ய், உலர் திராட்சை - 20 கிராம்
முந்திரிப்பருப்பு ஜாதிப்பத்திரி, ஜாதிக்காய் - 5 கிராம்
சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் - 100 மில்லி

செய்முறை:
கோதுமை ரவையை கழுவி, மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பீட்ருட்டை மேல்தோல் நீக்கி மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
FILE

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானவுடன் ஏலம், உலர்திராட்சை, முந்திரிபருப்பு, ஜாதிப்பத்திரி, ஜாதிக்காயை தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

வாணலியில் அரை லிட்டர் வெந்நீர் ஊற்றி பீட்ரூட் கலவையை சேர்க்க வேண்டும். 5 நிமிடம் கழித்து, கோதுமை ரவையை சேர்த்து கிளறவேண்டும். உப்புமா பக்குவத்தில் கலவை ஒன்று சேரும் போது, ச‌ர்‌க்கரையை தூ‌வினா‌‌ல் மறுபடியும் இளகும். மீண்டும் கிளறியபின், வறுத்தவற்றை மேலே தூவி அலங்கரிக்கவும்.

இதைச் சாப்பிட்டால் ரத்தம் விருத்தியடையும், தோல் மினுமினுக்கும், பசி உண்டாகும்.

ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌திய ா!

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments