Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஸியா செய்யலாம் இஞ்சி பிஸ்கெட்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2013 (15:09 IST)
நொறுக்குத் தீனி என்றாலே நம் பிள்ளைகள் தராமலே சாப்பிடுவார்கள். ஆனால் விலை உயர்ந்த தீனிகளை நாம் அவர்களுக்கு வாங்கி தந்தாலும் அதில் சேர்க்கப்பட்ட செயற்கை கலவைகளால் பிள்ளைகளின் உடலுக்கு கேடு ஏற்படும். டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. ஏன் இதனை நாமே வீட்டில் சுவையாகவும் எளிதாகவும் செய்ய கூடாது.

தேவையானவை,
FILE


வெண்ணெய் 115 கிராம்
சர்க்கரை -200 கிராம்
கோல்ட் கலர் சிரப் - 1 ஸ்பூன்
முட்டை - 1
மைதா 250 கிராம்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
இஞ்சி தூள் - 3 ஸ்பூன்
ஏலக்காய் - 1/2 tsp

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, கோல்ட் சிரப் சேர்த்து கைகளால் மிருதுவாக கிளரவும். பின்னர் முட்டையை பீட்டரில் நன்கு அடித்து அதனை கலவையுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையுடன் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அத்துடன் இஞ்சி பவுடர், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

இந்த கலவையை நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக்கவும். மைக்ரோ அவனை 180 ° சூட்டில் வைத்து உருண்டைகளை டிரேவில் வைத்து அவனின் சூட்டை 350 ° க்கு மாற்றவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் அவனிலிருந்து எடுத்து வெளியில் வைத்து சிறிது நேரத்தில் சூடாக பரிமாறவும்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments