Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா சிவராத்திரியின்போது லிங்கோற்பவ காலம் என்பது என்ன..?

Webdunia
ஒருவன் மகாசிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைப்பதோடு, அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்கள்  அனைத்தும் தீரும். 

மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில்  கலந்துகொண்டும் தான தருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.
 
முதல் ஜாம பூஜை: முதல் ஜாமம் மாலை 6.15 மணி முதல் இரவு 9.25 மணி வரை உள்ளது. அந்த காலத்தில் சிவனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம் செய்ய வேண்டும்.
 
இரண்டாம் ஜாம பூஜை: இரண்டாம் ஜாமம் 21ஆம் தேதி இரவு 9.25 மணி முதல் நள்ளிரவு 12.34 வரை உள்ளது. இந்த நேரத்தில் சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த  ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்ய வேண்டும். பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம் செய்தல் வேண்டும்.
 
மூன்றாம் ஜாம பூஜை: மூன்றாம் ஜாமம் பிப்ரவரி 22 நள்ளிரவு 12.34 முதல் அதிகாலை 3.44 வரை உள்ளது. இந்த நேரத்தில் தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம்  சாத்துதல் வேண்டும். மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம் செய்து வழிபடுவார்கள்.
 
நான்காம் ஜாம பூஜை: நான்காம் ஜாமம் பிப்ரவரி 22 அதிகாலை 3.44 முதல் காலை 6.54 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் சிவனுக்கு கருப்பஞ்சாறு அபிஷேகம்,  நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம்  செய்வார்கள்.
 
சிவதரிசனம் எப்போது சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, லிங்கோற்பவ காலமாகிய  இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மகரம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – தனுசு

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – விருச்சிகம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – துலாம்

இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதம், முன்கோபம் தவிர்ப்பது நல்லது! இன்றைய ராசி பலன்கள் (31.07.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments