Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முளை கட்டிய பயறு

Webdunia
100 கி முளை கட்டிய பயறில் உள்ள சத்து:
கலோரிஸ ் .................- 30
புரதச்சத்து ................- 3 க ி
கார்போஹைட்ரேட்... - 6க ி
நார்ச் சத்து ................- 2 க ி

முளை கட்டிய பயறு மிகவும் சத்தான ஒரு உணவு. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதவை. ஆகவே இது நோயாளிகளுக்கும ், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில் லைசின் எனப்படும் அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம ், ஃபாஸ்ஃபரஸ ், மெக்னீசியம ், பொட்டாசியம ், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ப ி, சி அடங்கியது.

டென்னிஸ ், டான்ஸ ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு ஊட்டச் சத்து.

முளைகட்டிய பயறில் மருத்துவ குணங்கள் பல உள்ளன... காய்ச்சல ், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

இது இப்போதெல்லாம் எல்லா பெரிய நகரங்களிலும் Department Store s இல் விற்கிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பச்சைப் பருப்பு - பாசிப் பயறு என்றும் சொல்வார்கள்.

பச்சை பயறை ஒரு பிடி எடுத்து சில மணி நேரம் ஊற வைத்த ு, வடிகட்டிப் பின் ஒரு ஓட்டைப் பாத்திரம் அல்லது காய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்து விட்டால் மறு நாள் காலை முளை விட்டு இருக்கும்.

சிலர் துணியில் மூட்டை கட்டுவார்கள். சில சமயம் நாற்றமெடுக்கும். அதனால் காற்றுப் போகக் கூடிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். இதை ப்ரிஜ்ஜில் 4-5 நாட்கள் வரை கூட கெடாமல் வைத்திருக்கலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments