உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனால் திருமணம் நடப்பது இன்றோ அடுத்த மாதமோ அல்ல 2011ல்.
2011 ம் ஆண்டில் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்கிறது அந்த விளம்பர தகவல்.
இங்கேயே ஒரு திருமணத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்கிறோம். விண்வெளியில் என்றால்!!!! கட்டணம் எவ்வளவு இருக்கும்? ரொம்ப ஒன்றும் அதிகம் இல்லை வெறும் ரூ.10 கோடிதான். 10 கோடி கொடுத்து பதிவு செய்து கொள்ளும் ஜோடிக்கு விண்வெளியில் சிறிய விண்வெளி ஓடத்தில் திருமணம் இனிதே நடந்தேறும்.
திருமணச் சடங்குகளில் பெரும்பாலானவற்றை பூமியில் முடித்துக்கொண்டு உச்சகட்டமாக மாலை மாற்றுவது அல்லது நம்ம ஊர்க்காரர்கள் என்றால் தாலி கட்டுவதை விண்வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விண்வெளி திருமணத் திட்டத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.