Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல், கல்யாணம் என்றால் என்ன?

காதல், கல்யாணம் என்றால் என்ன?
, புதன், 30 ஜூலை 2008 (12:07 IST)
ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.

அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

க‌‌ல்யாண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?........


அந்த மாணவன் மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த ஆசிரியர், இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா. பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த மாணவன் கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை மாணவன் அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று ஆசிரியர் பதிலளித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil