Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலிக்காக திருடிய காதல் திருடர்கள்

காதலிக்காக திருடிய காதல் திருடர்கள்
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (15:32 IST)
சென்னையில் வழிப்பறி, பைக் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களின் வாக்குமூலம் மிகவும் கேலிக்குறியதாக உள்ளது.

சென்னையில் பல்வேறுப் பகுதிகளில் பெண்களிடம் செயின் பறிப்பது, பைக்குகளை திருடுவது போன்றவற்றில் ஈடுபட்ட இரண்டு பட்டதாரி இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பொழிச்சலூரைச் சேர்ந்த நந்தகுமார் (20), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (22) என்பது தெரிய வந்தது.

காவல் நிலையம் மற்றும் காவல் குடியிருப்புப் பகுதிகளில் திருடுவதை வழக்கமாகக் கொண்ட இவர்களிடம் இருந்து 55 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் காதலிகளை வெளியில் அழைத்துச் செல்ல பணம் இல்லாமல் தவித்தோம். அப்போது ஆலோசித்து திருடுவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தோம்.

வெங்கடேஸ்வரன் மின்னல் வேகத்தில் பைக் ஓட்டுவதைப் பயன்படுத்தி பெண்களிடம் சங்கிலி பறிக்க முடிவு செய்தோம். இதுவரை 9 இடங்களில் சங்கிலி பறித்துள்ளோம்.

திருடிக் கிடைக்கும் பணத்தை காதலிகளுக்காக செலவழித்தோம். அவர்களுடன் ஊர் சுற்றவும், நாங்கள் பணக்காரர்களின் பிள்ளைகள் என்ற நம்ப வைக்கவும் கலர் கலராக வண்டிகள் வாங்கினோம்.

அவர்களுக்கு நாங்கள் திருடர்கள் என்பது தெரியாது. பணம் தேவைப்படும் போதெல்லாம் வழிப்பறி செய்தோம் என்று கூறியுள்ளனர்.

காதலுக்கு (Love) அடிப்படையே உண்மையும், நம்பிக்கையும்தான். இங்கு அதுவே அடிப்பட்டுப் போய்விட்டது. தற்போது அந்த பெண்களும் உணர்ந்திருப்பார்கள், தாம் யாரை காதலித்தோம் என்று.

இளைஞர்கள் சமுதாயம் பல்வேறு இழி செயல்களில் சிக்கி நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க ஒவ்வொரு இளைஞனும் உறுதியேற்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil