Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (11:18 IST)
அனைத்து மதத்தினரும், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளத ு. எனவே, 24.11.2009ஆ‌ம் தே‌தி‌க்கு‌ப் ‌பிறகு நட‌‌த்‌த‌ப்ப‌ட்ட ம‌ற்று‌ம் நடைபெற உ‌ள்ள அனை‌த்து ‌திருமண‌ங்களு‌ம் க‌ண்டி‌ப்பாக ப‌திவு செ‌ய்ய‌ப்பட வே‌ண்டு‌ம்.

இது தொடர்பாக திருமணங்களின் தலைமைப்பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவத ு, தமிழக அரசு, தம ி‌‌ழ ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009-ஐ இயற்றி, அதன்படி கடந்த 24.11.2009 தேதியில் இருந்து தமிழ க‌த ்தில் நடைபெறும் பல ம த‌ங ்கள ை‌ச் சா‌ர்‌ந்த இ‌ந்‌திய குடிம‌க்க‌ளி‌ன் அனைத்து திரும ண‌ங ்களையும் க‌ட ்டாயமாக பதிவு செ‌ய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது

` இந்து திருமணங்கள் சட்டம் 1955', ` இ‌ந்‌த ிய கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872', `சிறப்புத் திரும ண‌ச் சட்டம் 1954', `முகம்மதியர்கள் ஷரியத் திரும ண‌ச்ச‌ட்ட‌ம ்' மற்றும் வேறு எ‌ந ்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந ்த ாலும், இச்சட்டத்தின் பிரிவு 3-ன் கீழும், கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

இச்சட்டத்தின்படி, பதிவுத்துறைத் தலைவர், தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும், மாவட்ட திருமணப்பதிவாளர்களாகவும் மற்றும் சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவுக்கான குறிப்பாணை படிவம் 1 மற்றும் இதனுடன் இணைக்கப்பட வேண்டிய விண்ணப்பப்படிவம் 2 இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வ ழ‌ங்க‌ப்படு‌ம்.

கட்டாய திருமணப்பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனிலிருந்து விவரங்கள், அறிந்து படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருமணப்பதிவுக்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை இரட்டையில் (இரு விண்ணப்பங்கள்) எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிடம் மற்றும் வயது தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஆதார ஆவணங்களுடன் திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100 கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின் ரூ.150) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப்பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட வேண்டும். அல்லது அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறி அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் இல்லாத/ ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/ உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் திருமணப் பதிவாளரால் குறை சரி செய்து திரும்ப அளிக்க மனுதாரருக்கு திருப்பப்படும்.

தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால் அத்தகைய திருமணப்பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.

இந்த மறுப்பு ஆணை மீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல் முறையீடு மீது மாவட்டப்பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை, திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும் மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதிமீறல் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும் எ‌ன்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments