Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியை‌க் கெடு‌க்கு‌ம்‌ குடி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2010 (14:40 IST)
குடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம், குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்கு‌ம் கேடு எ‌ன்பது போ‌ன்ற வாசக‌ங்க‌ள் மதுபான பா‌ட்டி‌ல்க‌ளிலேயே எழுத‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை வா‌ங்‌கி‌க் குடி‌க்கு‌ம் குடிமக‌ன்க‌‌‌ள் யாரு‌ம் அதை‌ப் படி‌ப்பது‌ம் இ‌ல்லை, படி‌த்து நட‌ப்பது‌ம் இ‌ல்லை.

குடி எ‌ன்பது மது‌ப்பழ‌க்க‌தையு‌ம், குடு‌ம்ப‌த்தையு‌ம் கு‌றி‌க்கு‌ம் சொ‌ல்லாகு‌ம். குடி‌த்தா‌ல் குடு‌ம்ப‌ம் கெடு‌ம் எ‌ன்பதுதா‌ன் குடி குடியை‌க் கெடு‌க்கு‌ம் எ‌ன்ற பழமொ‌ழி‌யி‌ன் பொரு‌ள். ஆனா‌ல் ந‌ம் குடிமக‌‌ன்களோ போதை‌யில இத படி‌ச்‌சி, அவ‌ங்க குடு‌ம்ப‌த்தால தா‌ன் அவ‌ங்க குடி‌க்‌கிறதே கெடுது‌ன்னு எழு‌தி‌யிரு‌க்‌கிறதா பு‌ரி‌ஞ்‌சி‌க்‌கிறா‌ங்க. எ‌ன்ன செ‌ய்வது?

ச‌ரி நகை‌ச்சுவையை ‌வி‌ட்டு‌வி‌ட்டு ‌விஷய‌த்‌தி‌ற்கு வருவோ‌ம்..

WD
கோ‌யி‌ல் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ந‌ம்மூ‌ர் ஆ‌ண்மக‌ன்களோ, பா‌ர் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்கவே மா‌ட்டா‌ர்க‌ள். அ‌‌ந்த அள‌வி‌ற்கு குடி‌ப் பழ‌க்க‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. காலை‌யி‌ல் 10 ம‌ணி‌க்கு டா‌‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ள் ‌திற‌க்க‌ப்படு‌கி‌ன்றன. இரவு 10 ம‌ணி‌க்கு மூட‌ப்படு‌கி‌ன்றன. காலை‌யி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வோரு‌ம், ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌பி‌ள்ளைகளு‌ம் அவசரக‌தி‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ந்த சமய‌த்‌திலு‌ம், டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌ன் வா‌யி‌ல்களை அடை‌த்து‌க் கொ‌ண்டு ‌நி‌ற்கு‌ம் பலரை நா‌ம் காண முடியு‌ம்.

காலை‌யிலேயே இ‌வ‌ர்க‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல், மாலை‌யு‌ம், அதையு‌ம் தா‌ண்டி இர‌விலு‌ம் இவ‌ர்க‌ள் எ‌ப்படி இரு‌ப்பா‌ர்‌க‌ள். மேலை நாடுக‌ளி‌ல் ‌நிலவு‌ம் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையை‌த் தா‌ங்க அவ‌ர்க‌ள் குடி‌க்‌கிறா‌ர்க‌ள். அதுவு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அள‌வி‌ற்கு ம‌ட்டுமே. ஆனா‌ல் அதை நமது குடிமக‌‌ன்களோ ‌தினமு‌ம் ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் குடி‌ங்க எ‌ன்று மரு‌‌த்துவ‌ர் கூறுவதை‌க் கே‌ட்டு ந‌ல்ல ‌பி‌ள்ளையாக ‌இ‌ந்த‌ த‌ண்‌ணியை‌க் குடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். இது நமது உடலு‌க்கு‌ம் கேடு, நமது ‌வீ‌ட்டி‌ற்கு‌ம் கேடு எ‌‌ன்பதை எ‌ப்போது உண‌ர்வா‌ர்க‌ள்.

ஒரு கதை உ‌ள்ளது, அதாவது ஒரு தேவதை தனது கை‌யி‌ல் ஒரு குழ‌ந்தையையு‌ம், ஒரு மதுபான‌ப் பா‌ட்டிலையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு ஒருவ‌‌னிட‌ம் செ‌ன்று, ஒ‌ன்று இ‌ந்த குழ‌ந்தையை‌க் கொ‌ல்ல வே‌ண்டு‌ம், இ‌ல்லை மதுவை‌க் குடி‌க்க வே‌ண்டு‌ம், இ‌ல்லை எ‌ன்றா‌ல் எ‌ன்னை‌க் க‌ற்ப‌ழி‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌‌ல் எதை ‌நீ செ‌ய்வா‌ய் எ‌ன்று கே‌ட்‌கிறது. அத‌ற்கு அ‌ந்த ம‌னித‌ன், குழ‌ந்தையை‌க் கொ‌ல்வது பாவ‌ம், அதை ‌விட பாவ‌ம் இ‌ந்த பெ‌ண்ணை‌க் க‌ற்ப‌ழி‌ப்பது. மதுவை‌க் குடி‌ப்பதா‌ல் யாரு‌க்கு‌ம் ‌பிர‌ச்‌சினை இ‌ல்லை எ‌ன்று ‌நினை‌த்து மதுவை‌க் குடி‌த்து ‌விடு‌கிறா‌ன்.

மதுவை‌க் குடி‌த்தது‌ம் போதை தலை‌க்கே‌றி, அ‌ந்த குழ‌ந்தையை‌க் கொ‌ன்று, பெ‌ண்ணையு‌ம் க‌ற்ப‌ழி‌த்து ‌விடு‌கிறா‌ன். இதுதா‌ன் குடிகார‌ர்க‌ளி‌ன் ‌நிலமையு‌ம்,

.

குடி‌ப்பத‌ற்கு மு‌ன் எ‌வ்வளவு ந‌ல்லவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்களோ, போதை தலை‌க்கே‌றியது‌ம் அ‌வ்வளவு‌க்கு அ‌வ்வளவு ‌தீய செய‌ல்க‌ளி‌ல் எ‌ந்த ‌தய‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இற‌‌ங்கு‌கிறா‌ர்க‌ள். குடி‌ப்பதாலேயே பலரு‌க்கு‌ம் தவறு செ‌ய்ய அனை‌த்து உ‌ரிமையு‌ம் இரு‌ப்பதாக ‌நினை‌த்து மனை‌வியை அடி‌ப்பது, குழ‌ந்தைகளை அடி‌ப்பது, தெரு‌வி‌ல் போவோ‌ர் வருவோ‌ரிட‌ம் ச‌ண்டை போடுவது என பலவாறான ‌தீய செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள்.

ஒரு ந‌ல்ல குடு‌ம்ப‌ம், குடு‌ம்ப‌த் தலைவ‌னி‌ன் குடி‌ப்பழ‌க்க‌த்தாலேயே கெ‌ட்டு ‌சீர‌ி‌‌ழி‌ந்து போனதை ந‌ம்‌மி‌ல் பலரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம். இ‌ன்னு‌ம் எ‌த்தனையோ குடு‌‌ம்ப‌ங்க‌ள் ‌சீ‌ர‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதையு‌ம் க‌ண்கூடாக பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்போ‌ம்.

WD
கூ‌லி வேலை செ‌ய்பவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, எ‌த்தனையோ பெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய பத‌விக‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் நப‌ர்க‌ள் கூட, த‌ங்களது ச‌ம்பா‌த்‌திய‌த்தை முழுவது‌ம் டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌லேயே செலவ‌ழி‌த்து‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு போவதை பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.

‌ வீ‌ட்டி‌ற்கு வருமானமு‌ம் இ‌ல்லாம‌ல், குடி‌த்து ‌வி‌ட்டு வ‌ந்து மனை‌வியையு‌ம், குழ‌ந்தைகளையு‌ம் அடி‌த்து கொடுமை‌ப்படு‌த்து‌ம் கணவ‌னை எ‌த்தனையோ மனை‌விக‌ள் க‌ல்லானாலு‌ம் கணவ‌ன், பு‌ல்லானாலு‌ம் புருஷ‌ன் எ‌ன்று எ‌ண்‌ணி வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் இதனை‌த் தா‌ங்க முடியாம‌ல் கணவ‌ன் எ‌‌ன்ற ப‌ந்த‌த்தை உத‌‌ரி ‌வி‌ட்டு செ‌ல்பவ‌‌ர்களு‌ம் உ‌ண்டு. ஆனா‌ல் ‌சில‌ர், ச‌ந்த‌ர்‌ப்ப சூ‌ழ்‌‌நிலையா‌ல் கணவனை கொலை செ‌ய்யு‌ம் அள‌வி‌ற்கு‌ம் செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

ஒரு நாளை‌க்கு த‌மி‌ழ் நா‌ளித‌ழ் ஒ‌ன்‌றிலாவது, குடு‌ம்ப‌த் தகராறு, கணவனை‌க் கொ‌ன்ற மனை‌வி எ‌ன்ற செ‌ய்‌தி இ‌ட‌ம்பெ‌ற்று ‌விடு‌கிறது. க‌ட்டிய‌க் கணவனையே‌ மனை‌வி கொ‌ல்லு‌ம் அள‌வி‌ற்கு கொ‌ண்டு செ‌ல்வது எது? கணவனை‌க் கொலை செ‌ய்த மனை‌வி ‌சிறை‌க்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ‌பிறகு ‌பி‌ள்ளைக‌ளி‌ன் க‌தி எ‌ன்ன? அ‌ந்த குடு‌ம்ப‌ம் எ‌ன்ற வா‌ர்‌த்தை ‌சிதைவது எதனா‌ல்? சாதாரண ஒரு இ‌ல்ல‌த்தர‌சியை கொலை‌க்கா‌ரியா‌க்‌குவது எது? இ‌ப்படி ப‌ல்வேறு கே‌ள்‌விகளு‌க்கு ஒரே ப‌தி‌ல் இரு‌க்க முடியுமானா‌ல் அது இ‌ந்த குடி‌ப்பழ‌க்க‌ம்தா‌ன்.

குடி‌ப்பழ‌க்க‌த்தா‌ல் குடு‌ம்ப‌த்தை இழ‌ந்தவ‌ர்க‌ள் பல‌ர், வா‌ழ்‌க்கையை தொலை‌த்தவ‌ர்க‌ள் பல‌ர், கு‌ற்றவா‌ளிகளானவ‌ர்க‌ள் பல‌ர், உ‌ற்றவரை கு‌‌ற்றவா‌ளியா‌க்‌கியவ‌ர்களு‌ம், உ‌யிரையே இழ‌ந்தவ‌ர்களு‌ம் பல‌ர் உ‌ள்ளன‌ர். இ‌ப்படி‌யிரு‌க்கு, அ‌ந்த குடியா‌ல் அடையு‌ம் ந‌‌ன்மைதா‌ன் எ‌ன்ன?

சாலை‌யி‌ல் நட‌க்கு‌ம் பல வாகன ‌விப‌த்துகளு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌க் காரணமாக குடிய‌ல்லவா இரு‌க்‌கிறது. வாகன‌த்‌திலு‌ம் ச‌ரி, வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் ச‌ரி ‌விப‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் இ‌ந்த குடி எ‌ன்ற அர‌க்கனை ந‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வராம‌ல் தடு‌க்க வே‌ண்டாமா? சமுதாய‌த்தையே ‌சீர‌ழி‌க்கு‌ம் குடியா‌ல் ‌உ‌ங்க‌ள் குடி கெட வே‌ண்டுமா?

குடி‌ப்பதை மற‌ப்போ‌ம், குடு‌ம்ப‌த்தை ‌நினை‌ப்போ‌ம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

Show comments