Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தில் திருமணம்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (18:58 IST)
FILE
மனிஷா கெளசிக் - ஜோதிட ஆலோசகர்

அன்பிற்கும் காதலிற்குமான மாதமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது. அதிலும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்திலோ அல்லது அந்த நாளின் நெருக்கத்திலோ திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் பொருத்தமுடையது. திருமணத்தைப் பற்றி தாமஸ் மூர், “வேறுபட்ட விதியையும், வாழ்வையும் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் இணைக்கும் உன்னதமான பந்ததைத்தை ஏற்படுத்துவது திருமணமாகும ்” என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் நமது வாழ்வு என்பதும் கூட நமது ஆத்மனின் புரியாத, கால வரையறையற்ற ஒரு பந்தம்தான். காதலர் தினத்தில் தங்களது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள எனது வாசகர்கள், அது தொடர்பான பணிகளில் மூழ்கியுள்ள வேளையில் நான் இதனை எழுதுகிறேன். இருந்தாலும், உங்களுடைய வாழ்வை அன்பினாலும், காதலாலும் நிரப்ப நினைத்தால் உங்கள் திருமணத்திற்கு நான் கூறும் இந்த ஆலோசனைகளையும் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் மண நாளை மேலும் நிறைவுடையதாக்கும்.

உங்களுடைய திருமண அழைப்பிதழில் இருந்தே காதலர் தின வண்ணத்தை கொடுக்கத் துவங்குங்கள். திருமண அழைப்பிதழில் மன்மதனின் அழகிய உருவத்தை பொறித்து, வார்த்தைகளை தங்க நிறத்தில் இருக்குமாறு அமையுங்கள். உங்கள் நாளின் வண்ணத்தை உங்கள் அழைப்பிதழ் பறைசாற்றட்டும். திருமண அழைப்பிதழில் உங்கள் இருவரின் புகைப்படங்களையும் பொறித்திடுங்கள்.

உங்கள் திருமண பந்தத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் அந்த நிகழ்விற்கான மண்டபத்தை மிக எச்சரிக்கையாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் எந்த மண்டபத்தை தெரிவு செய்தாலும், அங்கு ஏராளமான மெழுகு வர்த்திகளை கொளுத்தி வைக்கும் வசதியுள்ளதாக அது இருக்கட்டும், ஏனெனில் மெழுகு வர்த்திகள் திருமண நாளிற்கான மனச் சூழலைத் தரும். இயற்கையான ஒரு சூழலில் திருமண நிகழ்வு நடைபெறட்டும். அதற்கேற்ற வகையில் ஒரு தோட்டத்தையோ அல்லது மலர்கள் பூத்த செடிகள் நிறைந்த மாடி வீட்டையோ தெரிவு செய்யுங்கள்.

திருமண நிகழ்விற்கு முக்கியமானது மலர்களே, மிக அதிகமான மலர்களே. காதலர் தினத்தை...

FILE
நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்களோ அதனை உணர்த்தும் விதமான மலர் அமைப்பு ஒழுங்கமையுங்கள். திருமண மண்டபத்தின் மையத்தில் தங்க நிறத்தில் மன்மதனின் சிறு பொம்மைகள் பதிக்கப்பட்ட மலர் அலங்காரத்தை செய்து அசத்துங்கள். உங்களுடை மதிப்புமிக்க விருந்தினர்கள் அமரும் இருக்கைகள் பின்னால் மலர் அலங்காரம் அமையுமாறும் செய்யலாம்.

மண நாளிற்கான ஒரு வண்ணத்தை தெரிவு செய்து அதனை பளிச்சிடச் செய்வது நன்றாக அமையும். மண்டபத்தின் ஒரங்களையும், திருமணம் நடைபெறும் பந்தலையும் தங்க கரையுடன் கூடிய தூய வெள்ளை நிற துணியைக் கொண்ட அலங்காரத்தைச் செய்யலாம். இதோடு, நீங்கள் விரும்பினால், சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தை தனியாகவோ அல்லது சேர்த்தோ மேலும் அழகு சேர்க்கலாம். உங்களின் திருமணத்திற்கு மிக முக்கியமான காதலர் தின உணர்வை ஏற்படுத்த பளபளக்கும் நீலத்துடன், மிளிரும் தங்கம், பச்சை ஆகியவற்றை வெண்மையுடன் கலந்து அலங்காரங்களை அமையுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ளப்போகும் நீங்கள், அன்றைய தினத்தில் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உடையையே அணிய வேண்டும். சிகப்பு கரையுடன் கூடிய வெண்மை நிற ஆடைகளை அணியலாம். சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தலாம், ஏனெனில் அது அன்பைக் குறிப்பதல்லவா? உங்களின் அழகிய கூந்தல் அலங்காரத்திற்கேற்ற மலர்களை கூந்தலோடு இணையுங்கள். உங்கள் திருமண நகைகளும் காதலர் தின உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இதயம், ரோஜா, மன்மதன், புறாக்கள் ஆகிய ஏதாவதொன்று பொறிக்கப்பட்டதாக இருக்கட்டும். கெம்பு அல்லது சிவப்பு நிற ஆபரணக் கல் பொதித்த மோதிரங்களை அணியுங்கள். மணமகன் சிகப்பு வண்ண டை கட்டியிருத்தலும், மணமகள் இளம் சிவப்பு, வெள்ளி நிர உடையுடன் இருப்பதும் பொருத்தமாக இருக்கும்.

காதலர் தினத்தில் திருமணம் செய்யும்போது இசை இல்லாமலா? காதலை வெளிப்படுத்தும் இதமான இசையை பரப்புங்கள். எல்லோருக்கும் பரிச்சயமான காதல் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள். உங்களை வாழ்த்த வந்துள்ளவர்களும் காதல் உணர்வில் திளைக்கச் செய்யும் இசையை வாசிக்குமாறு செய்யுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்வது என்பது தொன்று தொட்டு நடைபெற்றுவருவதாகும். காதலுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட நாளை விட வேறு எந்த நாளில் வாழ்வு முழுவதையும் அன்பிற்காக அர்ப்பணிக்கும் பந்தத்தை அமைக்க முடியும்? இந்த நாளில் உங்களின் திருமணத்தை வைத்துக்கொண்டால் அதுவே உன்னதமான அந்தக் காதல் உணர்வைத் தரவல்லதாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!