Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணை மறைக்கும் `காதல்'கள்

கண்ணை மறைக்கும் `காதல்'கள்
, வெள்ளி, 31 ஜூலை 2009 (15:27 IST)
webdunia photo
WD
முந்தைய காலத்தில், தங்களது பதிகள் ஏதாவது சம்பவத்தால் உயிரிழக்க நேரிட்டால், இறைவனிடம் சண்டை போட்டு கணவன் உயிரை மீட்டவர்களும், கணவனே கண் கண்ட தெய்வம் என்று வழிபட்டவர்களும் வாழ்ந்த பூமி இந்த புண்ணிய பூமி.

இப்போது இந்த புண்ணிய பூமியில் பல இடங்களில் ரத்த ஆறு ஓடுகிறது. அந்த ரத்தத்தில் பெரும்பாலானவை, மனைவியால் கொல்லப்படும் கணவன்மார்களின் ரத்தங்களாக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

ஒரு வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பெண் சமூகம், மற்றொரு பக்கம் மிக வேகமாக சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.

கு‌ற்றவா‌ளிக‌ளி‌‌ல் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது. ஆனா‌ல்... கொ‌ல்ல‌ப்படுவது பெரு‌ம்பாலு‌ம் கண‌வ‌ன்களாக இரு‌ப்பதுதா‌ன் வேதனை‌க்கு‌ரிய ‌விஷய‌ம்.

webdunia
webdunia photo
WD
யார் தப்பு செய்திருந்தாலும் சண்டையில் முதலில் கை நீட்டி அடிப்பது கணவனாகவே இருக்கும். எந்த தவறை அவன் செய்திருந்தாலும் அவ்வளவு அடியையும் பொறுத்துக் கொள்வது மனைவியாகவே இருக்கும். திருப்பி அடிக்க முடியாமல் அல்ல, திருப்பி அடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டினால்.

இதெல்லாம் இப்போது எங்கே போனது... பக்கத்து வீட்டு வாலிபனோடு சேர்ந்து கொண்டு தனது கணவனையே எரித்துக் கொன்ற மனைவி...

கவுன்சிலர் கொலை என்ற செய்தியை கேட்டதும், அரசியல் செய்தி என்று நினைத்தால் மறுநாள் அது குடும்பச் செய்தியாகிறது. கவுன்சிலர் கொலையுண்டதும், அதுபற்றி பேசிய மனைவியின் பேட்டியைப் பார்த்திருந்த பலரும், இவர்தான் கொலைகாரி என்று அப்பட்டமாகக் கூறியதும், நினைத்ததும் உண்மை. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

கள்ளக்காதலுக்கு தொல்லையாக இருந்த மகனை வெட்டிக் கூறுப்போட்ட தாய்.

காதலுக்காக தனது சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்த மகள் என்று நம் தாய்க்குலங்களின் சாதனைப் பட்டியல் இப்படியா நீள வேண்டும்.

தான் என்ன செய்கிறோம், தான் செய்வது சரியா, தான் செய்வதில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை எப்படி சரி செய்வது என்னும் சுய பரிசோதனையை ஒவ்வொரு மனித மனமும் ஒவ்வொரு நிமிடமும் செய்து கொண்டுதான் இருக்கிறது.

சிலர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர்.

சிலர் சூ‌ழ்‌நிலை காரணமாக அ‌ல்லது தான் செய்வது தவறு என்று தெரியாமலேயே சிலவற்றை செய்துவிடுகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் விட, ஒரு சுய பரிசோதனையும், தன்னிலை பற்றிய ஒரு திடமும் இல்லாமல் இருப்பவர்களே இதுபோன்ற ‌தி‌ட்ட‌மி‌ட்ட கொலை‌ச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

webdunia
webdunia photo
WD
இவர்கள் ஆட்டுவித்த கருவியாகவே இதுபோன்ற கொலைகளில் செயல்படுகின்றனர். இவர்களை ஆட்டுவிப்பது ஒன்று காதலோ அல்லது காமமோ. இரண்டுமே இவர்களது கண்ணை குருடாக்கி, மூளையை மழுங்கடித்து, பாழுங்கிணற்றில் இவர்களே சென்று விழும் வகையில் செயல்படுகிறது.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இப்படி கண்ணைக் கட்டும் மூடு மந்திரமான இந்த `காதல்'கள் (காதலர்கள்) வாழ்வது சிறைச்சாலையில்தானே.

இத‌ற்கு ‌தீ‌ர்வு தா‌ன் எ‌ன்ன?

Share this Story:

Follow Webdunia tamil