Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடம்பரக் காதல்

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2011 (16:45 IST)
காதல் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துக்காகவே சிலர் காதலல் விழுவதுண்டு. பணம், செல்வாக்கு, ஆள் வலிமை உள்ள ஆண்கள் காதலில் தங்கள் பலத்தினை காட்டவேண்டும் என்பதற்காக, யாராவது ஒரு பெண் மீது குறி வைத்து காதல் காட்டுவார்கள்.

அந்தக் காதலை ஜெயிப்பதற்காக பணம், பலம் அனைத்தையும் காட்டுவார்கள். திருமணம் என்ற சூழல் ஏற்படும்போது மிக நல்ல பிள்ளையாக மாறி, "அம்மா, அப்பா சொல்படிதான் நடப்பேன்" என்பார்கள். ஏனென்றால் இவர்களது பெற்றோரின் சொத்து அவசியம் தேவை என்பதுதான் உண்மை.

இதேபோல் சில பெண்களும் தங்கள் இளமை மற்றும் அழகினை மற்றவர் முன் பறைசாற்றுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு எல்லை வைத்துக்கொண்டு, அதற்குப் பின் அந்தக் காதலர்களை அவமரியாதை செய்து அனுப்பிவிடுவார்கள்.

அதாவது இப்படிப்பட்டவர்கள் காதல் என்பதை ஒரு பொழுதுபோக்காக ஜாலியாக எடுப்பவர்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி ஏமாந்து போகும் ஆண், பெண்தான் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற மோசமான முடிவினை எடுப்பதுண்டு.

இப்படிப்பட்ட காதலைக் கண்டுகொள்வதும், விலக்குவதும் மிக எளிது. அதாவது ஆரம்பமே மிக அவசரமாக இருக்கும்.

" காதலிக்கிறேன்" என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சகஜமாகப் பேசுவார்கள். எல்லா முடிவுகளும் அவர்கள் எடுப்பதாகவே இருக்கும். நாளை ஒரு இடத்திற்குப் போகலாம் என முடிவெடுத்தால் எங்கே போவது, என்ன செய்வது, எப்பொழுது திரும்புவது என எல்லாவற்றையும் அவர்களே முடிவெடுப்பார்கள்.

இந்த வகையான ஆண், பெண் இருவரும் திருமணம் பற்றி பேசமாட்டார்கள். நம்பு என்று சந்திப்பார்கள். இவர்களை நல்ல காதலர்களாக மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்று கடினமானது.

எனவே, இப்படிப்பட்ட நபர்கள் என்று அறியவரும் பொழுது இது காதல் இல்லை என்று தெளிவடைவது நல்லது. மேலும், அவர்களுடன் நட்பினை தொடர்வதும் ஆபத்தானதே. ஏதாவது ஒரு கடினமான இக்கட்டான சூழலில் யாராவது ஒருவருடன் வாழ முடிவெடுத்துவிடுவார்கள். அவர்களுடன் கடைசி வரை ஓர் அடிமை நிலையில் வாழ வேண்டுமே தவிர அந்நியோன்யமாக வாழ முடியாது.

- பேராசிரியர் டாக்டர் டி.காமராஜ்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments