Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

Webdunia
" நீங்கள் காலைல எத்தனை மணிக்கு எழுந்திறிப்பீங் க?" என் கால் விரல்களைப் பார்த்தபடி மரகதம் கேட்டாள ்.

" எதுக்கு கேக்கு ற?"

" அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து நீங்கள் படிச்சுட்டு இருக்கிறத பார்த்தேன ். அம்மா இன்னைக்கு என்னதான் கோலம் போடச் சொன்னாங் க. அப்ப பாத்தேன ்."

" ஓ... அப்படிய ா..." வேண்டுமென்றே ஆர்வம் இல்லாதது போல் பதிலளித்தேன ்.

" காலைல எல்லாம் படிச்சுட்டு இருக்கீங் க... இரவெல்லாம் எழுதுறீங் க... எப்ப தூங்குவீங் க?" அவளது கேள்வ ி, இருபத்திரெண்டு வயது பெண்ணின் சிந்தனைப் போல் இல்லாமல ், முதல் வகுப்பு மாணவி போலவே இருந்தத ு. நிமிர்ந்து அந்த நூற்றியொரு விழுக்காடு உண்மை நிரம்பி வழியும் கண்களைப் பார்த்தேன ்...

" டேய ்... அப்படி என்னடா அந்த கண்ணாடியில இருக்க ு... அதையே முறைச்சுப் பாத்துட்டு இருக் க..."

திடுக்கிட்டான ். தலையைத் தூக்கி ராஜாராமைப் பார்த்தான ். இயல்புக்குத் திரும்பியதுபோல் நடித்தான ்.

" இல்லட ா... நாளைக்கு செமஸ்டர் இல்லைய ா... அதான் படிக்கலாமா வேணாவான்னு யோசிச்சேன ்," சமாளித்தான் சிவ ா.

" பார்த்தா அப்படி தெரியல மச்ச ி... ஏதோ பிரமை புடிச்சவன் மாதிரி கண்ணாடியவே வெறிச்சு பார்த்துட்டு இருந் த. சர ி, பிரஷ் பண்ணிட்டு கிளம்ப ு. சாப்பிட போகலாம ்."

குளியலறைக்குள் சென்றவன ், யோசிக்கத் தொடங்கினான ்.

' தூக்கத்தில் கண்களை மூடி கனவு காண்பது இயல்புதான ். ஆனால ், கண்கள் திறந்து கொண்டே என்னால் கனவு காண முடிந்தது எப்பட ி..?'

குழாயில் தண்ணீரை திறந்துவிட்ட ு, டூத் பிரஷ்ஷை வாயில் வைத்தான ்.

" ராஜ ா..."

" என்ன மச்ச ி... சீக்கரம் டிரஸ் சேஞ்ச் பண்ண ு. கிளம்புளாம ்."

" இல்லட ா. நான் பிரஞ்ச் பண்ணிக்கிறேன ். காலேஜ் வரல ை. செமஸ்டருக்கு படிக்கப் போறேன ். இன்னிக்கு கிளாஸ் அட்டண்ட் பண்றாத இல் ல."

" போடா லூசு சிவ ா. அத அப்பயே சொல்லியிருக்கலாம் இல் ல." முணகிக் கொண்டே கிளம்பினான ், ராஜாராம ்.

இடுப்பில் இருந்த துண்டினைக் கழட்டிவிட்டு உள்ளாடை அணிந்தவன ், நாற்காலியில் சரிந்தான ்.

மீண்டும் கண்களைத் திறந்திருந்தபோதே கனவுகள் வரத் தொடங்கி ன...

" கோவிந்தன்னு பெத்தவங்க வச்சப் பேர விட்டுட்டு சாரதிப் பித்தனாம ். எவண்டா அவன் சாரத ி? அவன் எழுதின புத்தகத்தைப் படிச்சுட்டு இவனும் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான ். ஒழுங்கா காலேஜ் முடிச்ச ா, மாசம் நூறு ரூபாய் சுளையா சம்பாறிக்கலாம ். அக்கறை இருக்காடி அவனுக்க ு."

அம்மாவிடம் என்னைப் பற்றி அப்பா திட்டிக்கொண்டிருக்கிறார ்.

1973... கவிதையே கதியாக இருந்த சாரதிப் பித்தன ், மகன் நிஜப் பித்தனாகக் கூடாது என்ற விழைவுடன் கண்ட போதெல்லாம் திட்டிக் கொண்டிருந்த தந்த ை, கணவனிடம் 'நீங்கள் சோல்றதே சர ி' என்று சொல்லிவிட்ட ு, சாரதிப் பித்தனின் கலைந்த முடிகளைக் கோதும் அம்ம ா. வீதிக்கொரு கவிஞர்களில் இவனும் ஒருவன் என்று சாரதிப் பித்தனை உதாசினப்படுத்திய பத்திரிகைகளும ் பதிப்பகத்தார்களும ், காயமடைந்த இதயத்தைக் கடைக்கண் பார்வையாளேயே குணப்படுத்தும் காதல் வைத்தியச்சி எதிர் வீட்டு மரகதம ்...

கோவிந்தனாகப் பிறந்து சாரதிப் பித்தனாக மாற ி, கவிதைகள் பல படைத்த ு, அவற்றில் முதல் கவிதை பிரசுரமாவதற்கு முன்னரே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே கடைவீதியில் காளை முட்டி இருபத்து ஒன்பதே வயதில் மாண்டது வர ை... கோர்வையாக அனைத்தும் ஆழ்மனதில் பதிந்துவிட்டத ு.

இப்போது சிவா புரிந்துகொண்டான ், தான் கண் விழித்தப்படி கண்டவை கனவல் ல; அத்தனையும் நிஜம ்... முற்பிறவியின் நிகழ்வுகள ்!

நான் சாரதிப் பித்தன ா? ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலுள்ள தமிழ் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கவிதைகளை வடித்தவன ா? இலக்கியவாதிகளின் பேச்சில் மூச்சுக்கு முந்நூறு முறை சுட்டிக்காட்டப்படுகிற கவிஞன ா? உலகின் 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரன ா? இறந்தபின் கொடுக்கப்பட்ட பல நூறு விருதுகளுக்கு உரியவன ா?

முற்பிறவியின் நிகழ்வுகள் மட்டுமல் ல; தனது முதல் படைப்பான 'காவிர ி' கவிதை முதல் இறுதியில் கடைசி இரு வரிகள் முடிக்காமல் விடுபட்ட 'அவசரநிலைக்கு அவசரம ்' கவிதை வரை அத்தனையும் சிவாவின் சிந்தனையில் குடிவந்துவிட்டத ு.

பகீரென்றத ு.

சாத்தியம ா? உண்மையில் தம் நினைவலையில் சிக்கியிருப்பத ு, முற்பிறவியின் நிகழ்வுகள் தான ா? ஜோதிடரை அணுகலாம ா? உளவியல் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம ா..?

இப்படி பல ஆமாக்களும் கேள்விக்குறிகளும் அவன் மனதில் நீண்டு கொண்டே சென்ற ன.

யோசித்தான ்... சிந்தித்தான ்... எழுந்தான ்... நடந்தான ்... அமர்ந்தான ்... எழுந்தான ்... தண்ணீர் குடித்தான ்... அமர்ந்தான ்... யோசித்தான ்... சிந்தித்தான ்...




முன்பிறவி நியாபங்கள் மட்டுமே மூளைக்குள் பதிவாகியிருந்தது. மூளையும் மனதும் வேறுவேற ோ... தான்தான் சாரதிப் பித்தன் என்று பூரணமாக அறிந்துகொண்டானே தவி ர, அந்த கவிஞனின் ஆன்ம ா, சிவாவிடம் இல்ல ை. அப்போதைய சாரதிப் பித்தனின் மன ஓட்டம ், இப்போதைய சிவாவிடம் துளியும் இல்ல ை. சிவா சிந்திப்பது சிவா ஊடாகவ ே. சாரதிப் பித்தனின் வாழ்க்கை மட்டுமே சிவாவின் மனதிலே முழுமையாக பதிவாகியிருந்தத ு.

சாரதிப் பித்தனின் வாழ்க்கையை ஒரு சிறு குறிப்பாய் நினைவலையில் சுழற்றிப் பார்த்தான ், சிவ ா...

கண்ணால் காண்பதை மனதால் உள்வாங்கிக் கொண்ட ு, அதை வார்த்தைகளால் சுவைபட வெளிப்படுத்தும் கவிஞன ். நிகழ்காலம் மட்டுமின்ற ி, எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தனது கற்பனைத் திறனால் முன்கூட்டியே கணித்துக் கூறிய ஆருடன ். எப்படியெல்லாம் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று பகுத்துக் கொடுத்த பகுத்தறிவாளன ், வாழ்க்கையைப் பகுத்தறிந்தாலும ், அதிலுள்ள ஆன்மிகக் கூறுகளை எடுத்துரைத்தவன ்... சாரதிப் பித்தன ்.

திருச்சி நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக காலம் கழித்த தந்தை ராஜகோபாலன ். ஆடவர்களின் கால்களை மட்டுமே பார்த்துப் பேசும் தாயார் தனலட்சும ி. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என படித்து கணக்காளனாக முன்னேறிய ராமசாமி அண்ணன ்... சொந்தங்களும் பந்தங்களும் நான்கு கைகளால் மட்டுமே எண்ணிவிடக்கூடியவ ை.

ஆனால ், சாரதிப் பித்தனின் உலகம் பெரியத ு. இதை உணர்ந்தவள ், பி.யு.ச ி. வரை படித்த மரகதம ். சாரதிப் பித்தனின் முதல் வாசக ி, முதல் சினேகித ி, முதல் மற்றும் கடைசி காதல ி.

தந்தை 'உதவாக்கர ை' அழைத்த போதெல்லாம ், மரகதம் ஆறுதல் சொல்லாவிட்டால் கவிதைகளைப் பெற்றெடுக்காமல் விட்டுவிட்டிருப்பான ், சாரதிப் பித்தன ்.

விடுதலைக்கு பாடுபட் ட, அதிகம் பரிட்சயம் இல்லாத சாரதி என்ற கவிஞனின் மீதான பற்றால ், சாரதிப் பித்தனானான ், கோவிந்தன ்.

மரகதம் மீது சினேகம் வந்தபோத ு, மரகதன் ஆகிவிடலாமா என யோசித்தான ். ஆனால ், ஏதோ ஒரு புள்ளியில் மரகதத்தை சாரதி வென்றுவிட்டதால ், சாரதிப் பித்தனாகவே நீடித்தான ்.

படைப்புகள் பரணுக்குச் செல்லத் தொடங்கி ன. பணம் பண்ணத் தெரியததால் பெற்றோர்களும் பிரியத் தொடங்கினர ். அப்போதும ், அருகில் இருந்து ஆராதித்தவள்தான் மரகதம ்.

கவிதைத் தொழிலை விட்டுவிட்ட ு, மரகதத்தை அழைத்துக் கொண்டு பட்டணம் சென்று புதுக்குடித்தனம் தொடங்கலாம் என்ற நினைத்த கணத்திலேயே காலன் எதிரே வந்துவிட்டான ். கடைவீதியில் நெஞ்சில் முட்டியது காள ை..!

பரணில் கிடந்த படைப்புகள் எப்படி பாருக்கு வந்தத ு? கவிதை என்ற பெயரில் ஆரம்பத்தில் கிறுக்கியவை கூ ட, பாடப் புத்தகத்திலே பதிவாகியிருக்கிறத ே? என் பெற்றோர்கள் மாண்டிருப்பார்கள ா? அதாவது நான் சாரதிப் பித்தனாக இருந்தபோது என்னை பெற்றவர்களாக இருந்தவர்கள ். இல்ல ை, அவர்களைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும ்? பணம் சம்பாதித்த அண்ணன் மட்டும் பிள்ளை என்று சென்றவர்களாயிற்றே அவர்கள ். சாரதிப் பித்தனின் மரகதம ்? ஆம ், அவள் என்னவாகியிருப்பாள ்? எனக்காக வாழ்வதாகச் சொன்னாள ே..?

மரகதம் பற்றிய நினைவு மட்டுமே சிவாவை முழுமையாக வியாபித்தத ு. அவளைப் பார்க்க வேண்டும் அல்லது அவளைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியத ு.

முற்பிறவி நியாபங்கள் வந்திருப்பதை யாரிடம் பகிர்ந்துகொள்ளலாம ். அரசாங்கத்திடமும் மக்களிடமும் சொன்னால ், சாரதிப் பித்தனுக்கு உரிய மரியாதைகளும் மதிப்புகளும் எனக்குக் கிடைக்கும ா? உலகம் என்னை ஆராதிக்கும ா?

இவையெல்லாம் தன்னை முட்டாளாக்கிவிடும ். பைத்தியம் என்று முத்திரைக் குத்திவிடும் என்று யதார்த்தமாக சிந்தித்தான ், சிவ ா.


நண்பன் ராஜாராமிடமாவது சொல்லிவிடலாம ே? அப்போதுதான் அவனை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்வது எளிதாகிவிடும ்.

" ராஜ ா..."

" என்ன மச்சான ்?"

" இந்த முன்ஜென்மம ், முற்பிறவி இதுல எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்காட ா?"

" அதப் பத்தியெல்லாம் யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுல்லட ா."

" நான் முன்ஜென்மத்துல யாருன்னு என்னாலா உணர முடியுதுட ா?"

" வாட ்..? ஹா ஹ ா... யாருட ா?"

" சாரதிப் பித்தன ்."

" அப் ப, நான் ஷேக்ஷ்பியர ்,"

" ஜோக்கடிக்கா த. சீரியஸா பேசுறேன ்."

" டேய ்... நேத்து டி.வி.யில் 'நெஞ்சம் மறப்பதில்ல ை', இல்லைன்னா 'எனக்குள் ஒருவன ்' பாத்துருப் ப. இல்ல... டிவிட ி- ல ஏதாவது பிரெஞ்ச ், ஜெர்மென் படம் பார்த்துருப்ப ா. ஓவர ா... கதை உடாம நாளைக்கு செமஸ்டருக்கு படி மகன ே..."

" சாரதிப் பித்தனோட கவிதை சொல்லட்டும ா?"

" ஆறாங்கிளாஸ் பையன் கூடதான் சொல்லுவான ். அவன் போன ஜென்மத்துல சாரதிப் பித்தன ா?"

" டேய ்... நான் சாரதிப் பித்தனோட புகழ் வேணுன்னு எல்லாம் விரும்ப ல. அவனோட காதல ி, அதாவத ு, என்னோட போன ஜென்மத்துக் காதலிய பாக்க விரும்பறேன ். வர்ற சண்டே ஸ்ரீரங்கம் போறேன ். வரதா இருந்தா வ ா..." ராஜாவின் வாயிலிருந்த சிகரெட்டை பிடுங்கி தரையில் இட்டு அணைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான ்.

".....?!?"


திருச்சி பேருந்து நிலையத்தில் வந்தடைந்த இருவரும ், ஸ்ரீரங்கம் போகும் பேருந்தில் ஏறினர ்.

" டேய ், இந்த சினிமா ல, கதைல வர்ற மாதிரி 'டேய் இந்த இடத்துக்கு நான் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்க ு', ' இந்த குளத்துலதான் குளிப்பேன ்', ' இந்த சலூன் கடைலதான் முடி வெட்டிப்பேன ்...' இப்படியெல்லாம் டயலாக் விடக்குடாது சரிய ா?"

" ரொம்ப பேசாதட ா... டேய ்... அந்த ஆலமரம் இன்னும் இருக்கு பாருட ா?" ஆர்வத்துடன் ஜன்னலோரத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மரத்தைக் காட்டினான ்.

" இதத்தாண்டா நான் சொன்னேன ். அந்த மரத்தை சுத்திதான் நீயும் உன் போன ஜென்மத்து ஃபிகரும் டூயட் பாடுணீங்கள ா?"

" ஓவரா நக்கல் பண்ணாதட ா? அவங்க இப்ப எப்படி இருப்பாங்ன்னு தெரியாத ு. அவளுங்கு பேரன ், பேத்திங்களா கூட இருக்கலாம ். ஜஸ்ட் ஒரு ரிசர்ச்சுக்காக வந்துருக்கோம ். கவிஞர் சாரதிப் பித்தனைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்கன்னு கேளுட ா."

" ஏன் நீ கேக்க மாட்டிய ா?"

" சொன்னா புரிஞ்சிக் க, நீயே கேள ு. எவ்ளோ நேரம் பேச்சுக் கொடுக்க முடியுமோ கொட ு. சாரதிப் பித்தனைப் பத்தி எவ்ளோ கேக்க முடியுமோ கேள ு."

" சரிட ா. பட ், இங்கேயே டேரா போட்டுடா த. இன்னைக்கு ஈவினிங்கே கிளம்பணும ்."

ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம ்.

சிவாவும் ராஜாராமும் இறங்கினர ்.

கால் பாதங்கள் சில்லிட்ட ன, சிவாவுக்க ு. அனிச்சையா க, இடது பக்கம் அவனது கண்கள் திரும்பி ன. அங்க ே, ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருந்தத ு. அதே பிள்ளையார் கோயில ்.

" யார்கிட்டடா அட்ரஸ் கேட்கிறத ு? என்ன பேரு சொன் ன? மங்கம்மாவ ா?"

" எதுவும் பேசாம என் பின்னால வாட ா. அவங்க பேரு மரகதம ்."

சிவாவின் கால்கள ், அந்த விசாலமான பாதை கொண்ட கடைத் தெருவில் நடந்த ன. ராஜாராம் பின் தொடர்ந்தான ்.

' நான ், சாரதிப் பித்தனாய் இருந்தபோத ு... எனக்காகவே வாழ்ந்தவள ். ஒவ்வொரு எழுத்தும் காகிதத்தில் பதிவானதற்கு காரணகர்த்த ா. அப்போதைக்கு என் முதலும் கடைசியுமான வாசக ி. பெற்றோர்களாலும் உற்றார்களாலும் உதாசினப்படுத்தியபோத ு, பார்வை ஸ்பரிசத்தாலேயே என் தனிமையை விரட்டியடித்தவள ். என் பிரிவை எப்படி தாங்கியிருப்பாள ்.

நான் இறந்துவிட்ட பிறக ு, எத்தனை வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டிருப்பாள ்? என்னை முழுமையாக மறந்துவிட்டிருப்பாள ா? நான் தான் உன் காதலன ். நான் தான் முற்பிறவியில் உன் காதலன ், சாரதிப் பித்தன் என்று சொல்லலாம ா? அவள் சிரிப்பாள ். ஒருவேளை என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம ். அப்படிச் சொல்வதும் முட்டாள்தனம ே.'

மனது சிந்தித்தத ு; கால்கள் நடந்த ன; ராஜாராம் இயந்திரம் போல் பின் தொடர்ந்து வந்தான ்.


" சிவ ா... எங்கடா போ ற..."

" என் பின்னால வாட ா." கடைத் தெருவின் மூலையில் இருந்த ஆசாரி கடையை நோக்கி நடந்தான் சிவ ா. அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக் க, நீண்ட முடியும் புஷ்டியான கன்னமும் கொண்ட மாநிற நபர் ஒருவர் அமர்ந்திருந்தார ்.

" ஸ்ரீனிவாசன் சார ், மரகதம்மா வீடு எங்க இருக்க ு?" அதிர்ந்தது ஸ்ரீனிவாசன் மட்டுமல் ல; ராஜாராமும் கூ ட.

" யாரப்பா ந ீ? என் பேரு எப்படி தெரியும ்?"

" இல்லைங் க... அங்க ஒரு டீக்கடைல சொன்னாங் க, உங்க கிட்ட கேட்ட ா, மரகதம்மா அட்ரஸ் சொல்வாருன்ன ு." சமாளித்தான் சிவ ா.

" ஓ... ஆம ா, எந்த மரகதம்ம ா?"

" ரொம்ப வருஷத்துக்கு முன் ன, இந்தத் தெருவோட கடைசி வீட்டுக்கு முன்னாடி வீட்டுல இருந்த ராமநாதன்ற பெரியவர் இருந்தார ு. அவருகூட இங்க பெரிய அளவுல பால்பண்ணை வெச்சுருந்தார ு. அவரோட மகள்தான் மரகதம ்."

ஸ்ரீனிவாசன் யோசித்தார ். சிவாவை அண்ணாந்து பார்த்தார ்.

" தம்ப ீ... நீ சொல்றது ஒரு இருபத்து அஞ்சி இருபத்து ஆறு வருஷம் முன்னாடி இருக்கும ா?"

' ஆமாண்ட சக்க ர' என்று ஸ்ரீனிவாசனின் தோளில் தட்டி சொல்ல வேண்டும்போல் இருந்தத ு.

" ஆமாங் க."

" எதுக்குப்பா கேக்கு ற?"

" இல்ல ை. நாங்க சென்னைல இருந்து வர்றோம ். கவிஞர் சாரதிப் பித்தனைப் பத்தி ஆராய்ச்சி ஒண்ணு பண்ணுறோம ். அவருக்கு எதிர் வீட்டுலதான் மரகதம்னு ஒருத்தங்க இருந்ததா கேள்விப்பட்டோம ். அவங்ககிட்ட பேசினா நிறைய தகவல் கிடைக்கும்னு வந்தோம ்."

" தம்பிங்களா இப்படி உட்காருங் க." இரண்டு நாற்காலி போடப்பட்டத ு. இருவரும் அமர்ந்தனர ்.

" டேய் பரம ு, இரண்டு கலரு வாங்கிட்டு வாட ா." சிறுவனை அதட்டினார் ஸ்ரீனிவாசன ்.

" தம்ப ி... கோவிந்தன் எனக்கும் சினேகிதன்தாம்ப ா. அதோ தெரியுது பார ு, அந்த ரோட்லதான் காளை முட்டி செத்தான ். கவிதை கவிதைன்னு ஏதேதோ எழுதுவான ். சென்னைல இருக்குற பத்திரிகைக்கு எல்லாம் அனுப்புவான ். ஆன ா, யாருமே அவன கண்டுகிட்டது இல் ல. மரகதம்தான் அவன் பின்னாடியே சுத்திட்டு இருப்ப ா.

அவன் செத்தப்புறம ், அவன் எழுதி எப்பவோ அனுப்புன கவிதை ஒண்ணு ஆனந்த விகடன்ல வந்தத ு. அப்புறம ், யாரோ ரெண்டு பேரு சென்னைல இருந்து கோவிந்தன் வீட்டுக்கு வந்தாங் க. அவன் வீட்டு பரண்ல இருந்த கவிதை பேப்பர ், நோட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு போனாங் க. அப்புறம் பாத்த ா, கோவிந்த வீட்டுக்கு பணமழை பேஞ்சுத ு. கவர்மென்டெல்லாம் விருது கிருதுன்னு எதேதோ கொடுத்துச்ச ு.."

" சரிங் க, மரகதம்..." இழுத்தான் சிவா.

" அ ட, அந்த பொண்ணை ஏம்பா கேக்கு ற. அது யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒத்த கால்ல நின்றுச்ச ு. யாரு சொல்லியும் கேக்கல. பாவம ், அவனையே நெனைச்சுகிட்டு திறிஞ்சுத ு. இப் ப... நம்ம திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் இருக்கு இல்லிய ா... அங்க ஏதாவது படிக்கட்டு கிட்டதான் பொம்மை வியாபாரம் பண்ணிக்கிட்டு ஏதோ ஒரு குடிசைல தனியா இருக்குத ு."

இதயம் ஒருகணம் செயலிழந்துவிட்டத ு.

என்னப் பேசுவத ு? என்ன யோசிப்பத ு? என்ன செய்வத ு? எதுவும் தெரியாத மனநில ை.


சட்டென இயல்புக்கு திரும்பியவனாய ், " சரிங்க நாங்க அப்ப அவங்கள அங்கேயே போய் பாத்துக்குறோம ். கிளம்புறோம ். ரொம்ப தேங்க்ஸுங் க." நழுவினான் சிவ ா.

திருச்சி பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர ்.

" என்னடா எமோஷனாயிட்டிய ா? சாரிடா நான் உன் மேட்டரை சீரியஸாவே எடுத்துக்க ல. ஆன ா, அந்த ஆளப் பாத்து 'ஸ்ரீனிவாசன ்' னு கூப்பிட்டதும் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன ்."

" அவர ு, அப்ப என்னோட ஸ்கூல் மேட்டுட ா." ஜன்னல் பக்கம் சாய்ந்த சிவாவின் மனம் ஏதேதோ யோசித்தத ு.

காதல ்... ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்தவன ். எழுத்தை காதலித்த அளவுகூட காதலிக்கப்படாத காதல ி, தனது காதலுக்காக வாழ்க்கையை இழந்துவிட்டிருக்கிறாள ். ' உன்னை தவிர வேற எதுவும் வேண்டாம் கோவிந்த ு' என்ற சொன்ன அன்றைய வார்த்தையை தவறவிடாதவள ். அவள் என் மீது செலுத்திக் கொண்டிருக்கும் அன்புக்க ு, நான் என்ன விலை கொடுப்பத ு? மரகத்தை ஏற்றுக்கொள்வதற்கு நான் இப்போது சாரதிப் பித்தனாக இல்ல ை. அவளை விட இருபத்து ஐந்து வயது சிவ ா. அவளோ ஐம்பது வயது பெண ்.

இத்தனை யோசனைக்கும் மேலா க, தனக்கு அவள் இப்போதைக்கு என்ன உறவ ு? என்ற கேள்வியே மேலோங்கியிருந்தத ு.


திருச்சி மலைக்கோட்ட ை.

பதினேழு படிக்கட்டுகள் கூட ஏறவில்ல ை. மரகத்தை சிவா பார்த்துவிட்டான ்.

" ராஜ ா... அவங்கதாண்ட ா." இருபது படிக்கட்டுகளுக்கு மேலே அமர்ந்திருந்த வயதான பெண்ணைப் பார்த்தபடி கூறினான ்.

அருகில் நெருங்கினார்கள ்.

சிவாவுக்கு வியர்த்தத ு. உடல் நடுங்குவது போல் இருந்தத ு. குரல் எழவில்ல ை. கசங்கிய காட்டன் சேலையைக் கட்டியிருந்த மரகதத்தின் கண்களை பார்த்தபடி எதிரே நின்றான ்.

மரகதத்திடம் ராஜாராம் பேச்சு கொடுத்தான ்.

அவன் ஏதேதோ கேட்டான ். மரகதம் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தாள ். சிவாவுக்கு ஏதும் காதில் விழவில்ல ை.

வறுமையில் வாடிய முகத்தைப் பார்த்தான ். சாரதிப் பித்தனிடம் உதிர்க்கப்பட்ட புன்னகை முழுவதுமாக இறந்துவிட்டிருந்தத ு. ஆனால ், அந்தக் கண்களில் மட்டும் வசீகரம் குறையவில்ல ை. கண்கொட்டாமல் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான ். உடல் நடுக்கம் குறையத் தொடங்கி ன. நிதானம் வந்தத ு. சில நொடிகள ், தன்னில் மீண்டும் குடிவந்த சாரதிப் பித்தனின் ஆன்மா நீங்கிவிட்டதுபோல் உடல் இலகுவானத ு.

" நாங்க பண்ற ஆராய்ச்சியில கவிஞர் சாரதிப் பித்தன ்..." மரகதத்திடம் உளறிக்கொண்டிருந்தான ், ராஜாராமன ்.

" அம்ம ா..." அழைத்தான ், சிவ ா.

நிமிர்ந்தாள ், மரகதம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

Show comments