Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரை

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரை
இப்போதைய பயன்பாட்டுக்கு ஏற்றபடி விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இந்திரா ரேச்சல் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்திரா ரேச்சலின் கணவர் ஆண்ட்ரூ சாலமன் ராஜ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தோம்.

ஆனால் விவகாரத்து சட்டத்தின் 2வது பிரிவின்படி, விவாகரத்து கோரி விண்ணபிக்கும் சமயத்தில் தம்பதிகள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதால் எங்கள் மனு ஏற்கப்படவில்லை.

இதனால் எனது நிலையில் விவாகரத்து சட்டத்தின் பயன்பாடே கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே இந்த சட்டப்பிரிவில் மாற்றம் செய்து செல்லாததாக மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, ஏ. குலசேகரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், வழக்கு விசாரணையில் இருந்த போதே மனுதாரரின் கணவர் ஆண்ட்ரூ சாலமன் ராஜ் இறந்துவிட்டார்.

எனவே மனுதாரர் தொடர்பாக எந்த உத்தரவும் வழங்க அவசியம் இல்லை. அதே சமயத்தில் இப்போதைய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், விவாகரத்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது.

விசாகரத்து சட்டம் 1869ம் ஆண்டு வகுக்கப்பட்டது. இந்த சட்டத்தின் இப்போதைய பயன்பாட்டுக்காக 2வது பிரிவில் சிறிய மாற்றத்துடன் நீதிமன்றங்கள் பயன்படுத்தலாம். விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் தம்பதியயரில் யாராவது ஒருவர் இந்தியாவில் வசித்தால் போதும் என்று அந்த பிரிவை நீதிமன்றங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இதற்கு ஏற்றவாறு விவாகரத்து சட்டத்தில் மத்திய சட்ட அமைச்சகம் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil