Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் சந்தேகப் பிராணிகள்

காதல் சந்தேகப் பிராணிகள்
, திங்கள், 13 ஏப்ரல் 2009 (12:53 IST)
திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள் சந்தேகம் வலுப்பது என்பது பேசி தீர்வு காண வேண்டியதாகி விடும்.

ஆனால் இந்த சந்தேக எண்ணம் காதலிக்கும்போதே வந்துவிட்டால்.. என்ன செய்வது?

ஒரு விஷயத்தைப் பற்றி ஆயிரம் கேள்வி கேட்பார்கள். அதையெல்லாம் நம்மீதான அக்கறையில் கேட்கிறார்கள் என்று நாமும் பதில் சொல்லிக் கொண்டிருப்போம்.

நம்மிடமிருந்து ஒன்றுடன் ஒன்று எங்காவது ஒட்டாமல் பதில் வரும்போது பிரச்சினை ஆரம்பிக்கும். அது எப்படி அப்படி நடந்தது. நீங்கள் அப்போது எங்கே இருந்தீர்கள் என்று கேள்விகள் துளைத்து எடுப்பார்கள்.

சின்ன விஷயத்தையும் மறந்து வீட்டீர்களானால் உங்கள் நிலை அவ்வளவுதான். வாழ்நாள் முழுவதும் ஒரு காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி போலத்தான் உங்கள் வாழ்க்கை நகரும்.

மேலும் சந்தேகங்கள் ஒருவருக்கு ஆரம்பித்து விட்டால் அது எப்போதும் முடிவது இல்லை.

அதனால் காதலின் ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் வந்து கொண்டே இருக்கும் இணையிடம் அதிக பாசத்துடன் இப்படி கேட்கிறார்கள் என்று நினைத்து பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

நம்மை ஒருவரோடு சம்பந்தப்படுத்தி கேள்வி கேட்கும்வரை நமக்கு அவர்களது எண்ணம் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரோடு நம்மை சம்பந்தப்படுத்திவிட்டால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

சரி அவரது பார்வை அப்படி இருக்கிறது, சூழ்நிலை மாறிவிட்டால் அவர்களும் மாறி விடுவார்கள் என்று எண்ணலாம். அதுதான் இல்லை. நீங்களும் சரி, அவரும் சரி எங்கு இருந்தாலும், உங்கள் அருகில் இருக்கும் ஒரு மனித நிழலாக இருந்தாலும் அதனை தொடர்பு படுத்தி பல கேள்விகளைக் கேட்பார்கள்.

சந்தேகப் பிராணி வளருமே தவிர வளர்ச்சி குன்றாது. எனவே, சந்தேகப் பிராணியை காதலித்ததே தவறு, இதில் திருமணம் தேவையே இல்லை என்று முடிவெடுப்பதுதான் சிறந்தது.

இதென்ன இப்படி ஒரு அதிரடி முடிவாகச் சொன்னால் எப்படி என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் திருமணமாகி இருவரது வாழ்விலும் இந்த சந்தேகத்தால் புயல் வீசி பிரிவதை விட, காதலர்களாகவே பிரிந்து விடுவது இருவருக்குமே நல்லது.

ஒவ்வொரு நாளும் தூண்டில் புழுவாய் நெளிவதை விட, பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க எண்ணுங்கள்.

சந்தேக நோயை வளர்க்காதீர்கள். மற்றவர்களுக்கு பரவ விடாதீர்கள்.


Share this Story:

Follow Webdunia tamil