Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணைய‌ர் அலுவலக‌த்‌தி‌ல் குடு‌ம்ப நல மைய‌ம்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (12:21 IST)
குடு‌ம்ப‌த்‌தி‌ல் கணவன் - மனைவிக்கு இடையேயான ஏ‌ற்படு‌ம் குடும்பப் பிரச்சின ைகளை‌ சுமூகமாக‌த் தீர்க்கும் விதத்தில் சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ர ் அலுவலகத்தில் குடும்பநல மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காவ‌ல்துற ை ஆணைய‌ரை சந்திக்க மக்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. அப்போது அவரிடம் கொண்டு வரப்படும் பல பிரச்சினைகள், குடும்ப சண்டைகளை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. எனவே அப்படிப்பட்ட புகார்களுக்கு தீர்வு காண, சமூக நல வாரியத்தின் குடும்பநல ஆலோசனை மையத்தை சென்னை காவ‌ல்துற ை ஆணைய‌ர் அலுவலகத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அத‌ன்படி, நே‌ற்று செ‌ன்னை காவ‌ல்துற ை ஆணைய‌ர் அலுவலக‌‌த்‌தி‌ல் குடு‌ம்ப நல மைய‌‌த்தைன ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் துவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

‌‌ பிறகு இது கு‌றி‌த்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய காவ‌ல்துற ை ஆணைய‌ர ், தினமும் 40 முதல் 60 மனுதாரர்களை நான் சந்திக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவை, காதல் தகராறு, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றுவது, கணவன்-மனைவி இடையேயான சண்டைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக அணுகாமல் சமுதாயப் பிரச்சினையாக அணுக முடிவு செய்தோம்.

எனவே சமூகநல வாரியத்தின் மூலம் இங்கு வரும் மனுதாரரின் குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடிவு செய்தோம். அதன்படி இந்த மை ய‌த்தை துவ‌க்‌கியு‌ள்ளோ‌ம். காவ‌ல்துறை‌க்கு வரும் புகார்களில் குடும்பப் பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்ட பிரச்சினைகளை இந்த மையத்துக்கு அனுப்பி வைப்போம். அங்கு சம்பந்தப்பட்ட கணவன்-மனைவி, உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இ‌தி‌ல் குடு‌ம்ப‌த்‌தின‌ர் ஒ‌ன்றுப‌ட்டு சமாதானமாக‌ப் போனா‌ல் ‌பிர‌ச்‌சினை ‌தீ‌ர்‌த்து வை‌க்க‌ப்ப‌டும‌்.

அ‌வ்வாறு ஒ‌த்து‌ப்போக‌வி‌ல்லை எ‌ன்றா‌ல், அ‌ந்த மனு ‌மீ‌ண்டு‌ம் காவ‌ல்துறை‌க்கே அனு‌ப்‌பி வை‌க்க‌ப்படு‌ம். ‌பி‌ன்ன‌ர் தேவை‌க்கு ஏ‌ற்ப மனு ‌மீது ச‌ட்ட‌ப்‌பூ‌ர்வமாக நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ராஜே‌ந்‌திர‌ன் கூ‌றினா‌ர்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments