Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அளவான பு‌ன்னகை தா‌ன் ஆயுத‌ம்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2009 (13:09 IST)
WD
த‌ற்போதைய இ‌ய‌ந்‌திர‌த்தனமான உல‌கி‌ல் ம‌னித‌ர்க‌ள் தொலை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌த்தனையோ ந‌ல்ல ‌விஷய‌ங்க‌‌ளி‌ல் பு‌‌ன்னகையு‌ம் ஒ‌ன்று. கால‌ை‌யி‌ல் எழு‌ந்‌திரு‌க்கு‌ம் போது தொ‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம் பரபர‌ப்பு, இரவு தூ‌ங்க‌ச் செ‌ல்லு‌ம் வரை தொட‌ர்‌கிறது. நடு‌வி‌ல் ‌‌சி‌ரி‌க்கவோ, பு‌ன்னகை‌க்கவோ யாரு‌க்கு‌ம் நேர‌மி‌ல்லை.

இ‌ந்த சமய‌த்‌தி‌ல் பு‌ன்னகையுட‌ன் கூடிய ஒரு முக‌த்தை‌ப் பா‌ர்‌த்தா‌ல் நா‌ம் மய‌ங்‌கி ‌விடுவது இய‌ற்கை‌த்தானே? எ‌தி‌ர்பாலரை‌க் கவர மெ‌ல்‌லிய‌ப் பு‌ன்னகை ஒ‌ன்றே போதும‌ல்லவா?

ஒருவ‌ர் எ‌ன்னதா‌ன் அழகான ஆடைகளு‌ம், அ‌ணிகல‌ன்களு‌ம் அ‌ணி‌ந்‌திரு‌ந்தாலு‌ம், அ‌ந்த அழகு‌க்கெ‌ல்லா‌ம் அழகு சே‌ர்‌ப்பது பு‌ன்னகைதானே. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்தபடி, பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பவரை‌த்தா‌ன் எ‌ல்லோருமே ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். ‌சிடு‌சிடுவென இரு‌க்கு‌ம் ‌சிடுமூ‌ஞ்‌சியை யாரு‌ம் ‌விரு‌ம்புவ‌தி‌ல்லை.

இதேதா‌ன் காதலு‌க்கு‌‌ம் பொரு‌ந்து‌ம். ஒருவரை ‌நீ‌ங்க‌ள் கவர வே‌ண்டு‌ம் எ‌ன்றாலோ, ஒருவ‌ர் ‌மீது உ‌ங்களு‌க்கு ஈ‌ர்‌ப்பு ஏ‌ற்படுவதாக இரு‌ந்தாலோ அத‌ற்கு பு‌ன்னகை பெ‌ரிது‌ம் உதவு‌ம் எ‌ன்பதை மற‌க்கா‌தீ‌ர்க‌ள். கு‌றி‌ப்பாக எ‌ரி‌ந்து ‌விழு‌ம் பெ‌ண்களை ‌விட, பு‌ன்னகையுட‌ன் உ‌ள்ள பெ‌ண்களை‌த்தா‌ன் ஆ‌ண்க‌ள் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள்.

அத‌ற்காக எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌‌ங்க‌ள் எ‌ன்று சொ‌ல்ல‌வி‌ல்லை. அ‌ப்படி செ‌ய்தா‌ல் பை‌த்‌திய‌ம் எ‌ன்றோ, அவ‌ள் ஒரு மா‌தி‌ரி எ‌ன்றோ ‌நினை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு. எ‌ப்போது‌ம் யாரை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் மெ‌ல்‌லிய ஒரு பு‌ன்னகையை பரவ ‌விடு‌ங்க‌ள். இ‌ந்த தொ‌ற்று நோ‌ய் தா‌ன் ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ம‌ற்றொருவரு‌க்கு எ‌ளிதாக பரவு‌ம்.

எனவே, மெ‌ல்‌லிய பு‌ன்னகையு‌ம், ‌சி‌ரி‌த்த முகமு‌ம் ‌நி‌ச்சய‌ம் ம‌ற்றவ‌ர்களை ந‌ம்பா‌ல் கவ‌ர்‌ந்‌திழு‌க்கு‌ம். அ‌தி‌ல் எ‌ந்த ச‌ந்தேகமு‌ம் வே‌ண்டா‌ம்.

அளவான பு‌ன்னகையே காதலு‌க்கு ஆயுத‌ம். அதையே ஆ‌ண்க‌ளு‌ம் ச‌ரி, பெ‌ண்களு‌ம் ச‌ரி ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments