Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் முன்னிலையில் பாஜக: கேட்டதும் உயிரை விட்ட காங்கிரஸ் தலைவர்!

Webdunia
வியாழன், 23 மே 2019 (16:58 IST)
பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் செய்தியை கேட்டு உயிரைவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ஒருவர். 
 
17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. 
 
அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் சீஹோர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிப்பதை அறிந்ததும் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்தார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக கட்சி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க கோர போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மே 26 அன்று ஆட்சி அமைக்க இருப்பதாகவும், இது குறித்து இன்று மாலை நடைபெறும் பாஜக கட்சி கூட்டத்தில் கலந்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments