முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு - மு.தம்பித்துரை

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (19:47 IST)
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, கரூரில் அ.தி.மு.க சார்பில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், சிட்டிங் எம்.பி யுமான தம்பித்துரை, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அன்பழகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பலமணி நேரம், பரபரப்பிற்கு இடையே தாக்கல் செய்த வேட்புமனு நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தம்பித்துரை, முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஒரு கனவு கண்டார், அதாவது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென்று நினைத்தார். 
 
ஆனால் 37 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. இந்நிலையில், தற்போது வரும் தேர்தலில் அதே கொள்கையுடன் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி,எஸ் ஆகியோர் மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. 
 
அதே பார்முலாவின் கீழ் இந்த முறை எப்படியும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments