Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா..? பிரேமலதா கேள்வி..!

Senthil Velan
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:17 IST)
தேர்தலில் போட்டியிட திமுகவில் அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் அவர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பரிமாறு தாவி விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், திமுகவில் குறுநில மன்னர்கள் உள்ளதாகவும், அவர்கள் தலைமையில் தான் எல்லாம் நடக்கும் என்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் ஒன்றிய செயலாளர் முதல் தொண்டர்கள் வாய்ப்பு கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக என்று அவர் கூறினார்.
 
தேமுதிகவிலும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விருதுநகரில் மட்டும் தான் கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவதாகவும் பிரேமலதா கூறினார்.
 
திமுகவில் ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பினார். 

ALSO READ: தொடரும் தேர்தல் அத்துமீறல்..! 3-வது முறையாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..!

அதிமுக தேமுதிக கூட்டணி மகத்தான கூட்டணி என்றும் ஆட்சி பலம் அதிகார பலத்தை வைத்து ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள் என்றும் எனவே வருகிற 19ஆம் தேதி அனைவரும் தவறாமல் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்  என்றும் திருமதி பிரேமலதா கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..! கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு..!

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.! நாளை ஆளுநரை சந்திக்கிறது அதிமுக குழு..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments